Skip to main content

கூகுள் மேப்ஸ் நம்பத்தகுந்தவை அல்லை : சர்வேயில் தகவல்

கூகுள் மேப்ஸ் துல்லியமானதாக இல்லாததால் நம்பத் தகுந்தவை அல்ல என சர்வேயர் ஜெனரல் சுவர்ண சுப்பாராவ் ஒரு நிகழ்வில் கூறியுள்ளார்.
சர்வே ஆஃப் இந்தியா நடத்திய ஒரு நிகழ்வில் சர்வேயர் ஜெனரல் சுவர்ண சுப்பாராவ் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :
"கூகுள் மேப்புகள் அரசால் உருவாக்கப்பட்டவை அல்ல. அதனால் அவை அரசால் அங்கீகரிக்கபடவில்லை. மேலும் அவை துல்லியமானவையும் இல்லாததல் அதன் நம்பகத்தன்மையும் சந்தேகத்துக்குரியது.
கூகுள் மேப் அரசால் தடை செய்யப்படவில்லை. அதனை ஓட்டுனர்கள் பயன்படுத்துவதால் தவறில்லை. ஆனால் இருப்புப்பாதை அமைப்பு, சாலை அமைப்பு போன்றவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் அவைகள் இல்லை."
இவ்வாறு ராவ் கூறினார்.
ஆனால் அமெரிக்காவில் கூகுள் மேப் துல்லியமாக அனைத்து விவரங்களையும் தருவதால் அதை பயங்கரவாதிகள் உபயோகிக்கும் வாய்ப்பு உள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளது.
இந்திய சர்வே நிறுவனம் தனது மேப்புகளை அனைவரும் இலவசமாக பயன்படுத்த செய்யப் போகிறது என்றும் அதனால் துல்லியமான மேப்புகளை இணையத்தில் ஏற்றும் முயற்சி நடக்கிறது என்றும் மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்

Comments

Popular posts from this blog

Federal Bank Q1 Results: Net Profit Falls 8% YoY Despite Revenue Growth

  Last Traded Price (LTP):  ₹196.06 (-3.15%) Reporting Date:  Q1 FY25-26 (June 2025 vs. June 2024) Federal Bank released its quarterly earnings today, reporting  mixed financial performance —revenue growth overshadowed by a decline in net profit. Here’s a detailed breakdown: Metric Jun 2025 (₹Cr) Jun 2024 (₹Cr) Growth (%) Revenue 7,151 6,728 +6% Gross Profit 1,707 1,577 +8% Net Profit 947 1,040 -8%

பத்மாவதி படத்தின் பெயர் மாற்றம்.!!

தீபிகா படுகோனே நடிப்பு,சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. இப்படமானது டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவிருத்திருந்தது. அனால் இப்படத்தில் ராஜபுத்திர்கள் மற்றும் பத்மாவதி பற்றி தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக ராஜஸ்தான்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பல இடங்களில் போரட்டங்கள் வெடித்தது. இப்பிரச்சினையால் படத்தை வெளியிட முடியாமல் போனது.மேலும் இப்படத்திற்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்கள் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தனர். பத்மாவதி படமானது டிசம்பர் 28ஆம் தேதி திரைப்பட தணிக்கை குழுவுக்கு சென்றது.படத்தை பார்வையிட்ட தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் முக்கியமாக பத்மாவதி என்ற படத்தின் தலைப்பை மாற்ற பரிந்துரை செய்துள்ளது. அதாவது பத்மாவதி என்ற தலைப்பை பத்மாவத் என மாற்றுமாறு கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளது. படத்தில் சில மாற்றங்களை செய்யவும்,படத்தில் 26 கட் செய்யவும் சென்சார் போர்டு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே நடித்த படங்களில் அதிக எதிர்ப்பு கிளம்பியது பத்மாவதி படம்தான்...

அரவிந்த் சாமியுடன் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மிகா!!

அரவிந்த் சாமி நடிக்கும் ‘நரகாசூரன்’ படத்தில், ஆத்மிகாவும் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன . இவர், ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஆதிக்கு  ஜோடியாக நடித்தவர...