Skip to main content

அடுத்த ஃஷிப்ட்டுக்கு ஆள் வந்தாச்சு! !! புதிய இணையதள வைரஸ்: 'பொருளாதார அழிவை ஏற்படுத்துவதே நோக்கமானதாக உள்ளது!!

உலகெங்கும் பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்துவதே புதிய 'பெட்யா' இணைய வைரஸைப் பரப்பியவர்களின் நோக்கம் என்று ஐரோப்பிய யூனியனின் இணைய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
கணினிகளின் செயல்பாட்டை முடக்கும் புதிய வகை ரான்சம்வேர் இணைய வைரஸ் உலகின் பல பாகங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

 ஊடுருவல் மூலம் முடக்கிய கணினியை மீண்டும் செயல்பட வைக்க பிணைத் தொகை கேட்பது என்பது வெறும் கண்துடைப்பு. பாதிக்கப்பட்ட கணினியை மீண்டும் செயல்படச் செய்ய பிணைத் தொகை கோரும் நோக்கத்துடன் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்படவில்லை என்று கருத இடமிருக்கிறது. அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்துவதுதான் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களின் குறிக்கோள்.
கணினிகளையும் முக்கிய அமைப்புகளின் மின்னணு சேமிப்பகங்களையும் ஊடுருவித் தாக்குவதன் மூலம், அதிகபட்ச பாதிப்பையும் பொருளாதார அழிவையும் ஏற்படுத்துவதே உண்மையான நோக்கம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது என்றார் அவர்.
அமெரிக்காவில் அமைந்துள்ள சர்வதேச சரக்குப் போக்குவரத்துக் கப்பல் நிறுவனம் மேர்ஸ்க், மருந்து நிறுவனம் மெர்க், பிரபல கூரியர் நிறுவனமான ஃபெடரல் எக்ஸ்பிரஸ் இணைய வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகளிலும் பாதிப்பு ஏற்பட்டது. ரஷியா, ஜெர்மனியில் பல நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகின. மின் கட்டமைப்புகள் முடங்கின. உக்ரைனில் ஏ.டி.எம்.கள், விமானப் போக்குவரத்து சேவை உள்ளிட்டவை இணைய வைரஸ் தாக்குதலுக்கு இலக்காகின.


உக்ரைனில் வங்கிகளின் கணினி சேமிப்பகங்கள் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன. வங்கி சேவைகளை விரைந்து வழங்க முடியவில்லை. முடக்கத்துக்கு உள்ளான ஏ.டி.எம்.கள் செயல்பாடு சீராகி வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

Federal Bank Q1 Results: Net Profit Falls 8% YoY Despite Revenue Growth

  Last Traded Price (LTP):  ₹196.06 (-3.15%) Reporting Date:  Q1 FY25-26 (June 2025 vs. June 2024) Federal Bank released its quarterly earnings today, reporting  mixed financial performance —revenue growth overshadowed by a decline in net profit. Here’s a detailed breakdown: Metric Jun 2025 (₹Cr) Jun 2024 (₹Cr) Growth (%) Revenue 7,151 6,728 +6% Gross Profit 1,707 1,577 +8% Net Profit 947 1,040 -8%

பத்மாவதி படத்தின் பெயர் மாற்றம்.!!

தீபிகா படுகோனே நடிப்பு,சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. இப்படமானது டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவிருத்திருந்தது. அனால் இப்படத்தில் ராஜபுத்திர்கள் மற்றும் பத்மாவதி பற்றி தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக ராஜஸ்தான்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பல இடங்களில் போரட்டங்கள் வெடித்தது. இப்பிரச்சினையால் படத்தை வெளியிட முடியாமல் போனது.மேலும் இப்படத்திற்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்கள் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தனர். பத்மாவதி படமானது டிசம்பர் 28ஆம் தேதி திரைப்பட தணிக்கை குழுவுக்கு சென்றது.படத்தை பார்வையிட்ட தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் முக்கியமாக பத்மாவதி என்ற படத்தின் தலைப்பை மாற்ற பரிந்துரை செய்துள்ளது. அதாவது பத்மாவதி என்ற தலைப்பை பத்மாவத் என மாற்றுமாறு கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளது. படத்தில் சில மாற்றங்களை செய்யவும்,படத்தில் 26 கட் செய்யவும் சென்சார் போர்டு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே நடித்த படங்களில் அதிக எதிர்ப்பு கிளம்பியது பத்மாவதி படம்தான்...

அரவிந்த் சாமியுடன் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மிகா!!

அரவிந்த் சாமி நடிக்கும் ‘நரகாசூரன்’ படத்தில், ஆத்மிகாவும் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன . இவர், ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஆதிக்கு  ஜோடியாக நடித்தவர...