அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைகின்றன;முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் அணிகள் அம்மா நினைவிடத்திற்கு வருகை!!!
அம்மா நினைவிடத்திற்கு முதல்வன் எடப்பாடி பழனிசாமி அணிகள் மற்றும் ஓபிஎஸ் அணிகள் சற்று நேரத்தில் வருகை தருகின்றனர்.
இரண்டு அதிமுக அணிகளும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி.டி.வி அணியில் இருந்த 12 எம்எல்ஏ முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினார்கள்.
இதனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அதிரடியாக போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் வீட்டில் இரண்டு மணி நேரமாக நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார் பன்னீர்செல்வம்.
இரண்டு அணிகளுமே அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவார்கள் என தகவல் வெளியானதை தொடர்ந்து அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இரு தரப்பும் இன்று இணைந்தால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்து செய்தியாளர்களை சந்திப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comments