Skip to main content

கடைசி காலத்தில் ஒரு நடிகனின் வாழ்க்கை; இப்படிப்பட்ட ஒரு நடிகரை இழந்து விடுவமோ என்ற ஏக்கத்தில் தமிழக மக்கள். !!

உதவுங்கள் நல்லுள்ளங்களே! – நடிகர் சங்கம் வேண்டுகோள் அல்வா வாசு எனும் நல்ல நடிகனின் வாழ்க்கை மருத்துவமும் கைவிட்ட நிலையில் கடைசி கட்டத்தில் நிற்கிறது.

அவரது குடும்பத்துக்கு உதவுங்கள் நல்ல உள்ளங்களே என்று நடிகர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

இயக்குநர் மணிவண்ணனால் அறிமுகமான நடிகர் அல்வா வாசு. 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஆறு மாதங்களாக வாய்ப்பில்லாமல், உடல் நிலையும் சரி இல்லாமல் இருந்தவர், இன்று கவலைக்கிடமாக உள்ளார்இதுகுறித்து நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன் விடுத்துள்ள அறிக்கை:

500 படங்களுக்கு மேல் நடித்தவர் நடிகர் அல்வா வாசு. இயக்குநர் மணிவண்ணன் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்து இயக்குனாரான அந்த பொறுப்பு கிடைக்காமல் நடிகராகவே பயணித்து பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

பெரிய அளவில் அவர் சம்பாதிக்கவே இல்லை. ரொம்ப எளிமையான இயல்பான ஒரு மனிதர். முகம் சுளிக்குமாறு எதுவும் பேசமாட்டார். வாய்ப்புக்காக எதுவும் பேசமாட்டார்.

தனக்கு கிடைத்த வாய்ப்பில் தனக்காக ஒரு சின்ன குடும்பத்தில் ஒரு சூழ்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஆறு மாதமாக அலைந்து கொண்டிருந்தார்.

மிக சிரமமான காலகட்டத்தில் சென்னையில் வந்து இருக்கவே முடியாத ஒரு சூழ்நிலையில் அவர் சொந்த ஊரான மதுரைக்கே சென்றுவிட்டார்.

அவருடைய துணைவியார்தான் மிகவும் கஷ்டப்பட்டு அவரை கவனித்து வந்தார்.

கடந்த மூன்று மாதமாக அவரது உடல்நிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வந்தது.

ஒரு நல்ல சூழ்நிலைக்கு வந்துவிடுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போதே மருத்துவத்தை அவர் உடல் ஏற்றுக்கொள்ளவில்லை.

மனிதர்களுடைய வாழ்கையில் கடைசி நம்பிக்கை என்று சொல்லக்கூடிய விஷயங்கள் இரண்டு உள்ளன.

ஒன்று மருத்துவம், மற்றொன்று கடவுள் நம்பிக்கை. அதில் முதலாவது கைவிட்டுவிட்டது. மற்றொன்றான கடவுள் நம்பிக்கை நிச்சயம் காப்பாற்றும் என நாம் நம்பலாம்.

இப்போது நாம் செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒரு கலைஞன் சினிமாவை நம்பி வந்தான். நல்ல மனிதனாக வாழ்ந்தான்.

அவருடைய கடைசி காலத்தில் அவர் கண்முன்னாடியே அவர் குடும்பத்துக்கு பொருளாதார உதவி கிடைத்துவிட்டால் அவருடைய கடைசி காலம் மிக நிம்மதியாக இருக்கும்.

ஒரு வேளை அந்த நம்பிக்கையே கூட அவரை காப்பாற்றி விடும். அதனால் தயவு செய்து தங்களால் எவ்வளவு முடியுமோ அதை எங்கள் எங்களுடைய பிஆர்ஓ ஜான்சனிடம் கேட்டால் அவருடைய வங்கி கணக்கு முதலிய தகவல்களை தருவார்.

தங்களால் முடிந்ததை எவ்வளவு சீக்கிரம் தரமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுத்து உதவுங்கள். நன்றி ! -பொன்வண்ணன் தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர்.

இந்த செய்தி நடிகர் அல்வா வாசுவின் நலன் கருதி வெளியிடப்படுகிறது.

Comments

Popular posts from this blog

Federal Bank Q1 Results: Net Profit Falls 8% YoY Despite Revenue Growth

  Last Traded Price (LTP):  ₹196.06 (-3.15%) Reporting Date:  Q1 FY25-26 (June 2025 vs. June 2024) Federal Bank released its quarterly earnings today, reporting  mixed financial performance —revenue growth overshadowed by a decline in net profit. Here’s a detailed breakdown: Metric Jun 2025 (₹Cr) Jun 2024 (₹Cr) Growth (%) Revenue 7,151 6,728 +6% Gross Profit 1,707 1,577 +8% Net Profit 947 1,040 -8%

பத்மாவதி படத்தின் பெயர் மாற்றம்.!!

தீபிகா படுகோனே நடிப்பு,சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. இப்படமானது டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவிருத்திருந்தது. அனால் இப்படத்தில் ராஜபுத்திர்கள் மற்றும் பத்மாவதி பற்றி தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக ராஜஸ்தான்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பல இடங்களில் போரட்டங்கள் வெடித்தது. இப்பிரச்சினையால் படத்தை வெளியிட முடியாமல் போனது.மேலும் இப்படத்திற்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்கள் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தனர். பத்மாவதி படமானது டிசம்பர் 28ஆம் தேதி திரைப்பட தணிக்கை குழுவுக்கு சென்றது.படத்தை பார்வையிட்ட தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் முக்கியமாக பத்மாவதி என்ற படத்தின் தலைப்பை மாற்ற பரிந்துரை செய்துள்ளது. அதாவது பத்மாவதி என்ற தலைப்பை பத்மாவத் என மாற்றுமாறு கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளது. படத்தில் சில மாற்றங்களை செய்யவும்,படத்தில் 26 கட் செய்யவும் சென்சார் போர்டு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே நடித்த படங்களில் அதிக எதிர்ப்பு கிளம்பியது பத்மாவதி படம்தான்...

அரவிந்த் சாமியுடன் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மிகா!!

அரவிந்த் சாமி நடிக்கும் ‘நரகாசூரன்’ படத்தில், ஆத்மிகாவும் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன . இவர், ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஆதிக்கு  ஜோடியாக நடித்தவர...