தங்கம்போல விலை ஏறிக்கொண்டேபோகும் அயிரைமீன்
மீன்களில் சுவையானது கடல் மீன்கள்தான்.
அதிலும் வஞ்சிரம், விளமீன், வாவல், இறால் போன்ற மீன்களுக்கு நிகரில்லை.
அதன் விலை எப்பவும் ஏற்றத்திலேயே இருக்கும். ஆனால், தற்போது நன்னீர் மீன்களான அயிரைமீன், விரால்மீன்களின் விலை, கடல்மீன்களை விட அதிகமாகிவிட்டது.
காரணம், தனித்துவமான சுவையாலும் குறைவான உற்பத்தியாலும்.
வஞ்சிரம் கிலோ 700 முதல் 1000 ரூபாய் வரை கிடைக்கும்போது அயிரை மீன் 2,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments