கடந்த வாரம் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நடிகர் சக்தி ஒரு விளம்பர படத்தில் நடிப்பதற்காக சென்றுள்ளார்.
அப்போது அவரை கண்ட ஓவியா ரசிகர்கள் சக்தியை சூழ்ந்து கொண்டனர். கூட்டம் அதிகரித்ததோடு, கூச்சலும் எழுப்பப்பட்டதை அடுத்து விளம்பர பட சூட்டிங் ரத்தானது.
மேலும் சக்தியிடம் ஓவியா ரசிகர்கள், ஓவியாவை ஏன் அடிக்க போனீர்கள்.அவரை ஏன் தனிமைப்படுத்தினீர்கள் என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இதில் சிக்கிய சக்தி ஒன்றும் புரியாமல் தனது காரில் ஏறி சென்றார்.
இருந்தும் அவரை பைக்கில் பின்தொடர்ந்த ஓவியா ரசிகர்களிடமிருந்து எப்படியோ சக்தி தப்பித்து விட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Comments