சென்னையில் ஒரிரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதனால் சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளில் நீர் நிரம்பி வருகிறது.
ஆனால் இப்பொழுது பெய்து வரும் மழை இன்னும் இரண்டு நாட்களில் சென்னையை வெளுத்து வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் முன்னெச்சரிக்கையாக அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் எல்லாம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இச்சமயத்தில் அண்டை மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Comments