சட்டீஸ்கர் மாநிலத்தில் விவசாயி ஒருவருக்கு மின்கட்டணமாக ரூ.76.73 கோடி செலுத்தும்படி பில் அனுப்பப்பட்டுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் ராய்பூர் மகாசமுத் மாவட்டத்தில் விவசாயி ராம் பிரசாத் என்பவருக்கு செப்டம்பர் மாத மின்கட்டணமாக ரூ.76.73 கோடி செலுத்தும்படி பில் அனுப்பப்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த ராம்பிரசாத் மின்துறை அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டுள்ளார்.
ஆனால் அவர்களோ தொழிற்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட தவறு என்றும் சரியான மின்கட்டணமாக ரூ.1820 தொகையை செலுத்தினால் போதுமானது என்று கூறி பில்லை ராம் பிரசாத்திடம் கையில் கொடுத்துள்ளனர்.
இந்த பிரச்சினை குறித்து ராம் பிரசாத் கூறுகையில் : வீட்டு உபயோகத்திற்காக மட்டுமே நான் மின்சாரம் பயன்படுத்துகிறேன் என்றார்.
இந்த தவறுக்கு காரணமான கிளாக்குகள் இரண்டு பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments