தி.மு.க-வின் தலைவர் கருணாநிதி மரணம் குறித்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இப்படித்தான் முதலமைச்சர் அம்மாக்கும் சொன்னாங்க.! அம்மா இட்லி சாப்டாங்க! அப்புறம் என்ன நடந்தது.!! இங்க என்ன நடக்குன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.!!
தமிழகத்தில் சிறப்பு காவல்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்த செய்தியானது காட்டுத்தீ போல பரவியதால் மக்களின் மனதில் ஆட்சிக் கலைப்பா அல்லது முக்கிய முன்னாள் தலைவர்கள் யாராவது மரணமா என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழுந்தது. பிறகு காவல்துறை ஆணையர் நீயுஸ்7 தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இருப்பினும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் விடுவதாக இல்லை சும்மா கழுவி ஊத்திகொண்டிருக்கின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பப்பட்டு வந்தநிலையில் தலைவர் கருணாநிதி நலமுடன் உள்ளார் எனவும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ராஜ்யசபா எம்பி கனிமொழி தெரிவித்தாராம்.
சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் சந்தித்துள்ளார் மற்றும் இந்த சந்திப்பின்போது செயல்தலைவர் முக ஸ்டாலினும் உடனிருந்தார். அது தொடர்பான புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

Comments