Skip to main content

வரலாற்று துணுக்குகள்



பொதுவாகவே  வரலாறு விந்தைகள் நிறைந்தது .    அதிலும் சோழர் வரலாற்றை ஆழமாக ஆராய்ந்தால் பல விந்தைகள் உண்டு .நான் முன்பு ஒருமுறை மூன்று சோழ மன்னர்களுக்கு முதல் மந்திரியாக இருந்த ஒட்டககூத்தரை
பற்றி எழுதியிருந்தேன்   இவ்வாறே ஆறு சோழ மன்னர்களைக் கண்டவரும்  ஒருவர் இருக்கிறார் .
 அவர்தான் சோழர் குல மாணிக்கம் செம்பியன்மாதேவியார்.
இம்மாபெரும் பேரரசி ,
1. மாமன்னன் முதலாம் பராந்தக சோழன்,
2. கணவர் கண்டராதித்தன்,
3. கொழுந்தன் அரிஞ்சய சோழன்,
4. கொழுந்தனின் மகன் இரண்டாம் பராந்த சோழன் எனப்படும் சந்தரசோழன்,
5. தன் மகன் உத்தம சோழன்,
6. கொழுந்தனின் பேரன் ராசராச சோழன் காலம் வரை வாழ்ந்து சிவாலயங்களை கற்றளிகளாக்கியும், நாள் வழிபாட்டிற்கும் மாத வழிபாட்டிற்கும் நிவந்தங்கள் அளித்தும், சோழ அரசை நிலையான அரசாக்கிய குலமாணிக்கமாக திகழ்கிறார்.
இவர் பெயரால் பல நிவந்தங்கள் இடம்பெற்றிருப்பதை பார்க்கும்போது அப்போது பெண்கள் தமிழகத்தில் பெற்றிருந்த உயரிய நிலையை அறிய முடிகிறது .அதே காலக்கட்டத்தில் உலகெங்கும் பெண்களின் நிலை சொல்லும் படி இல்லை .
   இவர் ஆறு பேரரசர்கள் காலத்தில் வாழ்ந்த வரலாற்றை சோழர் சரித்திர நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த சோழப் பேரரசி தன் மாமனார், தன் கணவன், தன் கணவனின் தம்பி அரிஞ்சய சோழன் சுந்தரசோழன், மகன் உத்தமசோழன், பேரன் ராசராசன் காலத்தில் வாழ்ந்தவர்.
கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறாமல் சிறுவனாக இருந்த மகன் உத்தம சோழனை வளர்த்தெடுத்தத் தாயாக விளங்கினார்.     இரண்டாம் பராந்தக சோழன் காலத்தில் அவருக்கு  பிறந்த ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி, தேவனையும் பாட்டியாக இருந்து வளர்த்தார்.
சுந்தரசோழன் இறந்த பிறகு அருண்மொழி தேவனை பெற்றெடுத்த வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறி உயிர் துறந்தார்
 சுந்தரசோழனின் மூன்று பிள்ளைகளையும் வளர்க்கும் பாட்டியாக அவர் விளங்கினார். அப்போது அருண்மொழி தேவனுக்கு வயது 5தான்  பிற்காலத்தில் மாபெரும் பேரரசனாக ராஜராஜன் விளங்கியமைக்கு செம்பியன் மாதேவியின் வளர்ப்பு நிலை முக்கிய பங்காற்றியது.
மாமன்னர் ராசராசன் தனக்கு பிறந்த 3 பிள்ளைகளுக்கு தமக்கு உறுதுணையாக நின்ற மூவரின் பெயரை சூட்டினானர் . முதலாவதாக தனக்கு பிறந்த மூத்த மகளுக்கு தன் பாட்டியின் சிறப்பு பெயரான மாதேவிஅடிகள் என்று பெயரிட்டானர் . 2–வது மகளுக்கு தமக்கை குந்தவையின் பெயரை வைத்தானர் . தனது மகனுக்கு செம்பியன் மாதேவியாரின் மகன் மதுராந்தகன் பெயரை வைத்தானர் . இம்மதுராந்தகனே பிற்காலத்தில் முதலாம் ராஜேந்திர சோழன் என்று அழைக்கப்பெற்றார் .
  இவ்வம்மையார் பெயரில் நாகப்பட்டினத்தின் அருகில் செம்பியன்மாதேவி என்கிற ஊர் உள்ளது. இவ்வூரில் கயிலாயநாதர் கோவில் உள்ளது. இறைவன் பெயர் கயிலாயமுடைய மாதேவர். இறைவி பெயர் பெரிய நாயகி. மூன்று நிலை ராசகோபுரம் உள்ளது. கயிலாய நாதர் கோவில் செம்பியன் மாதேவியரால் கட்டப்பட்டதாகும். ராஜேந்திரன் என்னும் கங்கை கொண்ட சோழன் செம்பியன் மாதேவியின் படிமத்தை இக்கோவிலில் கி.பி.1019–ல் நிறுவினானர் இதனை கல்வெட்டுக்குறிப்பு (481–1925) குறிப்பிடுகின்றது  செம்பியன் மாதேவியின் மகன் உத்தம சோழனுக்கு மனைவியர் பலர் இருந்தனர் என்று செம்பியன் மாதேவி ஊரின் கல்வெட்டு குறிப்பிடுகின்றது. பட்டன தானதுங்கி, மழபாடித்தென்னவன் மாதேவி, இருங்கோளர்மகள், வானவன்மாதேவி, விழுப்பரையர் மகள் கிழானடிகள், பழவேட்டையர் மகள், பட்டத்தரசி திரிபுவன மாதேவி அன்றியும் பஞ்சவன் மாதேவி, சொர்ணமாதேவி, ஆரூரன் அம்பலத்தடிகள் எனப் பலர் இருந்தனர். இவர்கள் அனைவரும் தம் மாமியார் செம்பியன்மாதேவி பெயரால் அமைத்த திருக்கயிலாய முடையார் ஆலயத்திற்கு நாள் வழிபாட்டிற்கும், திங்கள் வழிபாட்டிற்கும் நிவந்தங்கள் பல அளித்தமையை அங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
பாருங்கள் !பெயர்உத்தமசோழர்ஆனால் எத்தனை  மனைவிகள் !
திருமுறை தலங்களுள் திருநல்லமும் ஒன்றாகும். சோழநாட்டு தென்கரை தலங்களுக்குள் ஒன்று இன்று இத்தலத்தை கோனரிராஜபுரம் என்று அழைக்கின்றனர். திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலமாகும். இக்கோவிலை கற்றளியாக்கி தன் கணவன் பெயரால் கண்டராதித்தம் என அழைத்திட செம்பியன் மாதேவியார் ஏற்பாடு செய்தார். அங்குதான் புகழ்பெற்ற மிகப் பெரிய நடராசர் சிலையும் உள்ளது .
இவ்வம்மையார் கற்றளியாக்கிய கோவில்களுக்குள் விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலும் ஒன்றாகும். இறைவன் பெயர் பழமலைநாதர். இறைவி பெயர் பெரியநாயகி. இக்கோவிலின் இப்பொழுதுள்ள சுற்றளி செம்பியன் மாதேவியால் கட்ட பெற்றதாகும். இக்கோவில் உத்தமசோழனின் பன்னிரண்டாம்ஆட்சியாண்டில்
கி.பி.982–ல் கற்றளியாக்கப்பட்டுள்ளது
மேலும் திருத்துருத்தி என்று அழைக்கப்பெற்ற குத்தாலம் சொன்னவாறு அறிவார் கோவிலையும் கற்றளியாக அமைத்து தந்துள்ளார். திருமணஞ்சேரி கோவிலையும் கற்றளியாக்கி உள்ளார். ஆநாங்கூர் கோவிலையும் கற்றளியாக அமைத்துள்ளார். திருக்கோடிக்கா கோவிலையும் கற்றளியாக்கி உள்ளார். தென்குரங்காடு துறை ஆபத் சகாயேஸ்வரர், பவளகட கொடியம்மை கோவிலை கற்றளியாக்கி உள்ளார்.  கல்வெட்டில் . செம்பியன்மா தேவியாரை குறிப்பிடும் பொழுது உத்தமதேவரை திருவயிறு வாய்த்த உடையபிராட்டியார் மாதேவடிகளாரான செம்பியன் மாதேவியார் என்று குறிப்பிடப்படுகிறார்.
இவ்வம்மையாரின் இறுதி திருப்பணி பெற்ற கோவில் புதுவைக்கு அருகில் உள்ள திருவக்கரை கோவிலாகும். இக்கோவில் ராஜராஜ சோழன் ஆட்சியின் 16–ம் ஆண்டாகிய கி.பி.1001–ல் கற்றளியாக்க பெற்றுள்ளது மற்றும் இக்கோவிலுக்கு இவ்வம்மையார் செய்த தொண்டுகளும் குறிப்பிட பெற்றுள்ளன. இதன் பிறகு இவ்வம்மையார் பற்றிய குறிப்புகள் காணப் பெறவில்லை. எனவே
கி.பி.1001–ல் இவர் சிவனடியை அடைந்திருக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு ஆறு மன்னர்களின் காலத்தில் வாழ்ந்து பல கோயில்களிலும் திருப்பணி செய்து வரலாற்று நினைவுகளை இன்னமும் வாழச் செய்த செம்பியன்மாதேவியார்என்றும் நினைவில் வாழ்த்தக்கவர் .
அண்ணாமலை சுகுமாரன்
முனைவர் சண்முக செல்வகணபதிஎழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகளை நன்றியுடன் பதிவிடுகிறேன்
இது ஒரு முகநூல் பதிவாகும் இந்த கட்டுரை தொடர்பாக புகார் ஏதும் இருந்தால் 9655109031 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் வாயிலாக புகாரை தெரியப்படுத்தவும்

Comments

Popular posts from this blog

Federal Bank Q1 Results: Net Profit Falls 8% YoY Despite Revenue Growth

  Last Traded Price (LTP):  ₹196.06 (-3.15%) Reporting Date:  Q1 FY25-26 (June 2025 vs. June 2024) Federal Bank released its quarterly earnings today, reporting  mixed financial performance —revenue growth overshadowed by a decline in net profit. Here’s a detailed breakdown: Metric Jun 2025 (₹Cr) Jun 2024 (₹Cr) Growth (%) Revenue 7,151 6,728 +6% Gross Profit 1,707 1,577 +8% Net Profit 947 1,040 -8%

பத்மாவதி படத்தின் பெயர் மாற்றம்.!!

தீபிகா படுகோனே நடிப்பு,சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. இப்படமானது டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவிருத்திருந்தது. அனால் இப்படத்தில் ராஜபுத்திர்கள் மற்றும் பத்மாவதி பற்றி தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக ராஜஸ்தான்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பல இடங்களில் போரட்டங்கள் வெடித்தது. இப்பிரச்சினையால் படத்தை வெளியிட முடியாமல் போனது.மேலும் இப்படத்திற்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்கள் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தனர். பத்மாவதி படமானது டிசம்பர் 28ஆம் தேதி திரைப்பட தணிக்கை குழுவுக்கு சென்றது.படத்தை பார்வையிட்ட தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் முக்கியமாக பத்மாவதி என்ற படத்தின் தலைப்பை மாற்ற பரிந்துரை செய்துள்ளது. அதாவது பத்மாவதி என்ற தலைப்பை பத்மாவத் என மாற்றுமாறு கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளது. படத்தில் சில மாற்றங்களை செய்யவும்,படத்தில் 26 கட் செய்யவும் சென்சார் போர்டு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே நடித்த படங்களில் அதிக எதிர்ப்பு கிளம்பியது பத்மாவதி படம்தான்...

அரவிந்த் சாமியுடன் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மிகா!!

அரவிந்த் சாமி நடிக்கும் ‘நரகாசூரன்’ படத்தில், ஆத்மிகாவும் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன . இவர், ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஆதிக்கு  ஜோடியாக நடித்தவர...