Skip to main content

டிஜிட்டல் திண்ணை: ஆட்சி சஸ்பெண்ட்? ஆளுனர் கோபம்!

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். வாட்ஸ் அப்பில் புது நம்பரில் இருந்து ரிங் வந்தது.

எதிர்முனையில் பேசியவர் நம்பத்தகுந்த வட்டாரத்தில் பணிபுரியும் ஒரு நண்பர். ‘நான் சொன்னேன்னு தெரிய வேண்டாம். அதான் புது நம்பர்ல இருந்து கால் பண்றேன்!’ சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு இணைப்பை டிஸ்கனெக்ட் செய்தார் அந்த நண்பர். அவர் சொன்னது இதுதான்...

“நேற்று நீதிமன்ற நிகழ்வுகள் எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்தபடி இருந்தார் ஆளுனர் வித்யாசாகர் ராவ். அதன் பிறகு இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அப்போது முதல்வரிடம், ‘தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் மீது எதுக்காக நடவடிக்கை எடுத்தீங்க. ஒருவார்த்தை சொல்லி இருக்கலாமே..இப்போ எவ்வளவு சிக்கல் வந்துடுச்சு பாருங்க..’ என்று கோபமாக கேட்டாராம் ஆளுனர். அதற்கு முதல்வர் பழனிசாமி, ‘நீங்க சொல்றது சரிதான்...ஆனால் எல்லாத்தையும் அருண் ஜெட்லிகிட்ட கேட்டுட்டுதான் செஞ்சோம். அவர் சொன்ன பிறகுதான் இங்கே நடவடிக்கை எடுப்பட்டது. உங்களுக்கு அங்கிருந்து சொல்லிருப்பாங்கன்னு நினைச்சோம். மத்தபடி உங்களுக்கு சொல்லக்கூடாதுன்னு எதுவும் இல்லை...’ எனச் சொன்னாராம்.

அதற்கு ஆளுனர், ‘அவங்க சொல்லுவாங்க.. இவங்க சொல்லுவாங்கன்னு நீங்க எதுக்கு நினைச்சுட்டு இருந்தீங்க.. நீங்களே சொல்லி இருக்கலாமே... நீங்க கூப்பிட்டு நான் எப்போ பேசாமல் இருந்தேன்? அவசரப்பட்டு நீங்க முடிவெடுத்துட்டீங்க. இப்போ எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து என் பெயரை இழுத்துட்டு இருக்காங்க. நான்தானே எல்லாத்துக்கும் பதில் சொல்லி ஆகணும்? ஒரு பக்கம் எதிர்க்கட்சிகள்... இன்னொரு பக்கம் கோர்ட்னு மாறி மாறி கேள்வி கேட்பாங்க.’ என சற்று கடுமையாகவே சொல்லிவிட்டுத்தான் போனை வைத்திருக்கிறார் ஆளுனர்.

அத்துடன் முடிந்துவிடவில்லை. எடப்பாடியுடன் பேசி முடித்த பிறகு, தலைமை செயலரையும் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார் ஆளுனர் வித்யாசாகர் ராவ். ‘இப்படி ஒரு நடவடிக்கை எடுக்கப் போறாங்கனு நீங்களாவது என்னிடம் முன்கூட்டியே சொல்லியிருக்கலாம். இனி அட்மின்ல என்ன ஆக்‌ஷன் எடுப்பதாக இருந்தாலும் என்னோட நாலெட்ஜ் இல்லாமல் செய்யக் கூடாது. மினிஸ்டர்ஸ் சொன்னாலும் சரி.. சீஃப் மினிஸ்டர் சொன்னாலும் சரி... என்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு செய்யுங்க. ’ என்று உத்தரவிட்டிருக்கிறார். மேலும்,முதல்வரிடம் ஆளுனர் போனில் பேசிய தகவல் அதிமுக வட்டாரங்களின் மேல் மட்டத்திலிருந்து லீக் ஆகி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

இதோடு நிற்காமல், தனது ஆந்திர வட்டார நண்பர்களிடம் தமிழக நிலவரம் பற்றி மேலும் சில கருத்துகளையும் பகிர்ந்துகொண்டிருக்கிறாராம் ஆளுனர். இன்று (செப்டம்பர் 21) மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு குடியரசுத் தலைவர் வருகிறார். மகாராஷ்டிர ஆளுனர் என்ற முறையில் குடியரசுத் தலைவரை வரவேற்க செல்கிறார் வித்யாசாகர் ராவ். அங்கே குடியரசுத் தலைவரை சந்திக்கும்போது, தமிழக அரசியல் நிலவரம் பற்றி விரிவாகப் பேசி, சட்டமன்றத்தை சஸ்பெண்ட் செய்யலாம் என்பதையே தனது ஆலோசனையாக தெரிவிக்க இருப்பதாக, தனது ஆந்திர நண்பர்களிடம் கோடிட்டுக் காட்டியிருக்கிறாராம் ஆளுனர். இந்த தகவலைத்தான் போனில் பேசிய நபர் என்னிடம் சொன்னார்” என்று முடிந்தது வாட்ஸ் அப் வாய்ஸ்.
இது ஒரு வாட்ஸ்அஃப் செய்தி இதற்கு sasna networks எந்த விதத்திலும் பொறுப்பாகாது.!!

Comments

Popular posts from this blog

Federal Bank Q1 Results: Net Profit Falls 8% YoY Despite Revenue Growth

  Last Traded Price (LTP):  ₹196.06 (-3.15%) Reporting Date:  Q1 FY25-26 (June 2025 vs. June 2024) Federal Bank released its quarterly earnings today, reporting  mixed financial performance —revenue growth overshadowed by a decline in net profit. Here’s a detailed breakdown: Metric Jun 2025 (₹Cr) Jun 2024 (₹Cr) Growth (%) Revenue 7,151 6,728 +6% Gross Profit 1,707 1,577 +8% Net Profit 947 1,040 -8%

பத்மாவதி படத்தின் பெயர் மாற்றம்.!!

தீபிகா படுகோனே நடிப்பு,சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. இப்படமானது டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவிருத்திருந்தது. அனால் இப்படத்தில் ராஜபுத்திர்கள் மற்றும் பத்மாவதி பற்றி தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக ராஜஸ்தான்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பல இடங்களில் போரட்டங்கள் வெடித்தது. இப்பிரச்சினையால் படத்தை வெளியிட முடியாமல் போனது.மேலும் இப்படத்திற்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்கள் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தனர். பத்மாவதி படமானது டிசம்பர் 28ஆம் தேதி திரைப்பட தணிக்கை குழுவுக்கு சென்றது.படத்தை பார்வையிட்ட தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் முக்கியமாக பத்மாவதி என்ற படத்தின் தலைப்பை மாற்ற பரிந்துரை செய்துள்ளது. அதாவது பத்மாவதி என்ற தலைப்பை பத்மாவத் என மாற்றுமாறு கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளது. படத்தில் சில மாற்றங்களை செய்யவும்,படத்தில் 26 கட் செய்யவும் சென்சார் போர்டு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே நடித்த படங்களில் அதிக எதிர்ப்பு கிளம்பியது பத்மாவதி படம்தான்...

அரவிந்த் சாமியுடன் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மிகா!!

அரவிந்த் சாமி நடிக்கும் ‘நரகாசூரன்’ படத்தில், ஆத்மிகாவும் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன . இவர், ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஆதிக்கு  ஜோடியாக நடித்தவர...