Skip to main content

ஆன்ட்ராய்டு பயனர்களுக்கான டவுண்ஷிஃப் விளையாட்டு பற்றி ஒரு பார்வை.!!!

இன்று டவுண்ஃஷிப் விளையாட்டு பற்றி பார்க்கலாம்.

இந்த விளையாட்டானது ப்ளேரிக்ஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது.

டவுண் ஷிப் விளையாட்டில் நீங்கள் ஒரூ பசுமையான நகரத்தை உருவாக்க வேண்டும். 


இந்த விளையாட்டானது முற்றிலும்  நகரம் கட்டிடம் மற்றும் இயற்கை  பண்ணைகள் நிறைந்த  ஒரு தனிப்பட்ட விளையாட்டாக உள்ளது!

நீங்கள் உங்கள் கனவு நகரத்தை உருவாக்க வேண்டும்.


நகரத்தை உருவாக்கினால் மட்டும் போதாது  நகரங்களில் மக்களுக்கு  தேவையான உணவு,உடை,இருப்பிடம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய வசதிகளை வாழும் மக்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும்.

உணவுக்காக வயல்களில் தானியங்களை விளைவிக்க வேண்டும். பின்னர் அவற்றை  அறுவடை செய்து விலங்குகள் மற்றும் மனிதர்களுக்காக ஏற்றவாறு  உணவுப் பொருள்களாக தயாரிக்க வேண்டும்.


பின்னர் தொழிற்சாலைகளை உருவாக்கி அதில் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள்,உடைகள்  ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.

 உங்கள் நகரத்தை வளர்க்கவும், பொருட்களை விற்கவும், கவர்ச்சியான நாடுகளுடன் வர்த்தகம்,திறந்த உணவகங்கள், சினிமாக்கள் மற்றும் பிற சமுதாய கட்டிடங்கள் ஆகியவை உங்கள் நகரத்தில் சிறப்பு சுவையை அளிக்கின்றன.


நகரத்தில் விலங்குகளான ஆடு,மாடு,கோழிகள் மற்றும் பன்றிகள் ஆகியவற்றை வளர்த்து அவற்றிடமிருந்து தேவையானதை பெற வேண்டும்.

இதனுடன்  வளங்களைப் பெறுவதற்கும் பண்டைய கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கவும் உங்களுடைய சுரங்கத்தை ஆராய்ந்து கலைப்பொருட்களை கண்டுபிடித்தல் ஆகியவை அடங்கும். உங்கள் நகரத்தில்  சொந்த மிருகக்காட்சிசாலையை இயக்கவும் மற்றும் உலகம் முழுவதும் இருந்து விலங்குகள் சேகரிக்கவும்.


உங்கள் கனவைக் நனவாக்க நீங்கள் ஒரு விவசாயி மற்றும் நகர மேலாளராக இந்த விளையாட்டை தொடங்குவோம்.
நீங்கள் தயாரா?


நகர்ப்புற சிறப்பு  அம்சங்கள்:

● உங்கள் கனவு நகரத்தை உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய பல்வேறு கட்டிடங்கள் மற்றும் அலங்காரங்கள் ஆகியவை டவுண்ஃஷிப் விளையாட்டில் கிடைக்கும்.

● உங்கள் தொழிற்சாலைகளுக்கு தேவையான பல்வேறு பயிர்கள் வளரவும் பின்னர் அவற்றை  செயல்படுத்தவும் நீங்கள் வழி வகுக்க வேண்டும்.
● வேடிக்கை, கவர்ந்திழுக்கும் கட்டிட நகரங்கள் ஆகியவை நீங்கள் கட்டளைகளுடன் அமைக்க வேண்டும்

 

 உன்னுடைய நகரம் பழங்காலச் சின்னங்களை  கண்டுபிடித்து சேகரிக்கிறது.

● அழகான விலங்குகள் பூங்காவில் இருக்க வேண்டும்

●பண்ணைகளை நீங்கள் நிர்வகிக்க வேண்டும்.


●  வெளிநாட்டிலிருந்து அயல்நாட்டிற்கு தேவையான  பொருட்களை கொண்டு வர வேண்டும்.


● நீங்கள் விலங்குகளை வளர்ப்பதற்கு ஒரு பூங்காவை உருவாக்க வேண்டும்.


● நாட்டின் கொடிகள் மற்றும் புகழ்பெற்ற அடையாளங்கள் நீங்கள் உங்கள் நகரத்தை  அலங்கரிக்க பயன்படுத்தலாம். சிலைகள்,மலைகள் மற்றும் இன்னும் பல!

● உங்கள் பேஸ்புக் மற்றும் கூகிள் ப்ளஸ் நண்பர்களுடன் விளையாடி டவுண்ஃஷிப்  சமூகத்தில் புதிய நண்பர்களை உருவாக்கி அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.

இந்த விளையாட்டானது  சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் அடோப் ஃப்ளாஷ் என்ற  பயன்பாட்டின் மூலம் முதலில் இடம் பெற்றது. அதன்பிறகு நவம்பர் 13, 2013 இல் iOS வெளியிடப்பட்டது; அதன் பிறகுதான்   2013 நவம்பர் 13 ம் தேதி, Google Play-ல் வெளியிடப்பட்டது. இதோடு சேர்த்து பிப்ரவரி 16, 2014 அன்று, அமேசான் ஆப்ஸ்டோரில் வெளியிடப்பட்டது.

இந்த விளையாட்டை கூகுள் ப்ளே ஸ்டோர்ரில் இருந்து பதிவிறக்கம் செய்து  கொள்ளலாம்.!!


©sasna networks ©

®All rights reserved ®

  Sasna networks™

Sasnanetworks@gmail.com

Sasnanetworks.blogspot.com

Www.facebook.com/sasnanetwork


Fc:Athisaya_Rj (author)


Comments

Popular posts from this blog

Federal Bank Q1 Results: Net Profit Falls 8% YoY Despite Revenue Growth

  Last Traded Price (LTP):  ₹196.06 (-3.15%) Reporting Date:  Q1 FY25-26 (June 2025 vs. June 2024) Federal Bank released its quarterly earnings today, reporting  mixed financial performance —revenue growth overshadowed by a decline in net profit. Here’s a detailed breakdown: Metric Jun 2025 (₹Cr) Jun 2024 (₹Cr) Growth (%) Revenue 7,151 6,728 +6% Gross Profit 1,707 1,577 +8% Net Profit 947 1,040 -8%

பத்மாவதி படத்தின் பெயர் மாற்றம்.!!

தீபிகா படுகோனே நடிப்பு,சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. இப்படமானது டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவிருத்திருந்தது. அனால் இப்படத்தில் ராஜபுத்திர்கள் மற்றும் பத்மாவதி பற்றி தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக ராஜஸ்தான்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பல இடங்களில் போரட்டங்கள் வெடித்தது. இப்பிரச்சினையால் படத்தை வெளியிட முடியாமல் போனது.மேலும் இப்படத்திற்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்கள் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தனர். பத்மாவதி படமானது டிசம்பர் 28ஆம் தேதி திரைப்பட தணிக்கை குழுவுக்கு சென்றது.படத்தை பார்வையிட்ட தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் முக்கியமாக பத்மாவதி என்ற படத்தின் தலைப்பை மாற்ற பரிந்துரை செய்துள்ளது. அதாவது பத்மாவதி என்ற தலைப்பை பத்மாவத் என மாற்றுமாறு கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளது. படத்தில் சில மாற்றங்களை செய்யவும்,படத்தில் 26 கட் செய்யவும் சென்சார் போர்டு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே நடித்த படங்களில் அதிக எதிர்ப்பு கிளம்பியது பத்மாவதி படம்தான்...

அரவிந்த் சாமியுடன் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மிகா!!

அரவிந்த் சாமி நடிக்கும் ‘நரகாசூரன்’ படத்தில், ஆத்மிகாவும் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன . இவர், ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஆதிக்கு  ஜோடியாக நடித்தவர...