நாங்க எல்லாத்துக்கும் ரெடியாகிட்டோம்
நீங்க ரெடியா என்று கேட்ட கிம் ஜொங் உன்: கடைசியாக ஏவப்பட்ட ஏவுகணையும் வெற்றி பெற்றதால் இந்த ஆணவம்.!!
கடைசியாக நேற்று வடகொரியா ஏவிய ஏவுகணை பெரும் வெற்றியளித்ததை தொடர்ந்து நாங்கள் ரெடி. நீங்கள் ரெடியா என்று கேள்வி எழுப்பியுள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜொங் உன். நேற்றைய தினம் மீண்டும் ஒரு ஏவுகணையை வட கொரியா பரிசோதித்துப் பார்த்துள்ளது. அது ஜப்பானுக்கு மேலாக பறந்து சென்று பல மைல் தொலைவில் கடலில் விழுந்து வெடித்துள்ளது. எனவே அமெரிக்கா மீது போர் தொடுக்க ரெடியாகிவிட்டோம் நீங்கள் ரெடியா என கிண்டலாகப் பேசியுள்ளார் வட கொரிய அதிபர் .
Comments