டெங்கு காய்சலை பற்றி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவே இந்த பதிவு டெங்கு என்றால் என்ன? அது எப்படிப் பரவுகிறது?''
டெங்கு காய்சலை பற்றி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தவே இந்த பதிவு
டெங்கு என்றால் என்ன? அது எப்படிப் பரவுகிறது?''
''டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் கிருமி. 'ஏடிஸ் எஜிப்டி’ (Aedes aegypti) என்ற பிரிவைச் சேர்ந்த டெங்கு தொற்று உள்ள பெண் கொசுவால் இது பரவுகிறது. டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கடித்த கொசு, பாதிப்பு இல்லாத மற்றொருவரைக் கடிக்கும்போது, அவருக்கும் டெங்கு பரவும். மற்றபடி தண்ணீர், காற்று, எச்சில், இருமல், தும்மல் மற்றும் தொடுதல் மூலம் இந்தக் கிருமி பரவுவது இல்லை. அதாவது மனிதனிடம் இருந்து மனிதனுக்கு இது நேரடியாகப் பரவுவது இல்லை.''
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?''
''காய்ச்சல் 104 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். இதனுடன் சோர்வு, தீவிரமானத் தலைவலி, உடல் வலி, கண் வலி, தசைகள் மற்றும் மூட்டு வலி, வாந்தி, உடலில் அரிப்பு, எலும்பு உடைவது போன்று வலி ஆகியவை இந்த நோயின் அறிகுறிகள்.''
டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?''
''டெங்குவைத் தவிர்க்கக் கொசு ஒழிப்பு ஒன்றே வழி. டெங்குவைப் பரப்பும் 'ஏடிஸ் எஜிப்டி’ கொசு நன்னீரில் முட்டை இடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு சுகாதாரமாகச் சுற்றுச்சூழலைப் பராமரிக்க வேண்டும்.
வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசு வலை பொருத்தலாம். வாசலில் நீண்ட திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம். கொசுவத்தி, கொசு விரட்டி, ஸ்பிரே போன்றவையும் பயன் கொடுக்கும்.
வீட்டுச் சுவர்கள் மீது 'டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோரச் சாக்கடையிலும் 'டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிப்பது பலன் கொடுக்கும். ஜன நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில், 1000 கன அடி இடத்திற்கு 4 அவுன்ஸ் 'கிரிசாலை’ப் புகையை செலுத்துவதும் கொசுக்களை விரட்ட உதவும்.
இவை எல்லாவற்றுடன், சுற்றுப்புறச் சுத்தம் முக்கியம்!''
டெங்கு காய்ச்சல் தடுக்க...
வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கவிடாதீர்கள். தெருவில் தண்ணீர்ப தேங்கியிருந்தால் சுகாதார ஊழியர்கள் வந்து அகற்றுவதற்குக் காத்திருக்காமல், நீங்களே தண்ணீரை அகற்றுங்கள்.
கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம். கொசு எதிர்ப்புக் களிம்பைப் பூசிக்கொள்ளுங்கள்.
குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிக் குடியுங்கள்.
காய்ச்சல் வந்தால் உடனே செய்ய வேண்டியது...
டெங்கு அறிகுறி தெரிந்தால், சிறிதும் தாமதம் இன்றி உடனடியாக மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

Comments