Skip to main content

வாட்ஸ்அப் புது அப்டேட் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யலாம்.


சர்வதேச அளவில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் சமூகவலை தளங்களுள் வாட்ஸ் அப் செயலி முக்கியபங்குவகிக்கிறது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரில் கிட்டதட்ட அனைவருமே வாட்ஸ் அப் செயலியையும் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த வாட்ஸ்அப் மூலம் தனிப்பட்ட நபர்களுக்கு மட்டும் இன்றி, 256 பேர் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்தி அதன் மூலமும் அவர்களுக்கும் செய்திகளையும், தகவல்களையும் பகிர்ந்துகொள்ளலாம்.

 ஆனால் இதில் தவறான தகவல்களையோ அல்லது தவறான குழுவிற்கு வேறு செய்தியையோ, தகவலையோ மாற்றி அனுப்பிவிட்டால் அதனை நீக்கும் வசதி இல்லாமல் இருந்தது. 

இதனால் நாம் அனுப்பும் தகவலை மற்றவர்கள் படிக்கும் முன்னதாக அதனை நீக்கும் வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்று வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்துவந்தனர். 
பயன்பாட்டார்களின் கோரிக்கையை தொடர்ந்து 
வாட்ஸ்அப் புதிய அப்டேட் மூலம் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தியுள்ளது.

அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யவும் அந்த மெசேஜ் யாருக்கு அனுப்பப்பட்டதோ அவருடைய மொபைலிலும் டெலிட் செய்யவும் பயன்படுகிறது.

 இந்த வசதி இப்போது பொது பயன்பாட்டுக்கு வந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த அம்சத்திற்கு வாட்ஸ்அப் Delete for Everyone என்று பெயரிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட மெசேஜை டெலிட் செய்யும் போது Delete for Me, Cancel, Delete For Everyone என்ற மூன்று ஆப்ஷன்கள் தோன்றும். தேவைப்பட்டால் நம்முடைய வாட்ஸ்அப்பில் மட்டும் டெலிட் செய்யவும் முடியும்.


 இந்நிலையில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் கோரிக்கையை நீண்ட நாட்களாக பரிசீலித்துவந்த வாட்ஸ் அப் நிறுவனம் வாட்ஸ் அப்பில் அனுப்பும் செய்திகளை நிரந்தரமாக நீக்கும் வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. 


இதன் மூலம் புதிதாக அப்டேட் செய்யப்பட்ட வாட்ஸ் அப்பில் நீங்கள் யாருக்காவது தவறான செய்தியை அனுப்பிவிட்டால் அதனை அனுப்பிய 7 நிமிடங்களுக்குள் டெலீட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

 ஆனால் வாடிக்கையாளர் அனுப்பும் செய்தியை பெறும் நபரும் லேட்டஸ்ட் அப்டேட் செய்திருந்தால் மட்டுமே நீங்கள் நீக்கும் செய்தியோ தகவலோ நீக்கப்படும் இல்லையென்றால் அந்த செய்தியை நீங்கள் யாருக்கு அனுப்பினீர்களோ அந்த நபர் அதனை பார்த்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog

Federal Bank Q1 Results: Net Profit Falls 8% YoY Despite Revenue Growth

  Last Traded Price (LTP):  ₹196.06 (-3.15%) Reporting Date:  Q1 FY25-26 (June 2025 vs. June 2024) Federal Bank released its quarterly earnings today, reporting  mixed financial performance —revenue growth overshadowed by a decline in net profit. Here’s a detailed breakdown: Metric Jun 2025 (₹Cr) Jun 2024 (₹Cr) Growth (%) Revenue 7,151 6,728 +6% Gross Profit 1,707 1,577 +8% Net Profit 947 1,040 -8%

பத்மாவதி படத்தின் பெயர் மாற்றம்.!!

தீபிகா படுகோனே நடிப்பு,சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. இப்படமானது டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவிருத்திருந்தது. அனால் இப்படத்தில் ராஜபுத்திர்கள் மற்றும் பத்மாவதி பற்றி தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக ராஜஸ்தான்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பல இடங்களில் போரட்டங்கள் வெடித்தது. இப்பிரச்சினையால் படத்தை வெளியிட முடியாமல் போனது.மேலும் இப்படத்திற்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்கள் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தனர். பத்மாவதி படமானது டிசம்பர் 28ஆம் தேதி திரைப்பட தணிக்கை குழுவுக்கு சென்றது.படத்தை பார்வையிட்ட தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் முக்கியமாக பத்மாவதி என்ற படத்தின் தலைப்பை மாற்ற பரிந்துரை செய்துள்ளது. அதாவது பத்மாவதி என்ற தலைப்பை பத்மாவத் என மாற்றுமாறு கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளது. படத்தில் சில மாற்றங்களை செய்யவும்,படத்தில் 26 கட் செய்யவும் சென்சார் போர்டு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே நடித்த படங்களில் அதிக எதிர்ப்பு கிளம்பியது பத்மாவதி படம்தான்...

அரவிந்த் சாமியுடன் இணைந்த மீசைய முறுக்கு ஆத்மிகா!!

அரவிந்த் சாமி நடிக்கும் ‘நரகாசூரன்’ படத்தில், ஆத்மிகாவும் நடிக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன . இவர், ‘மீசைய முறுக்கு’ படத்தில் ஆதிக்கு  ஜோடியாக நடித்தவர...