ஆஸ்திரேலியாவின் கிழக்கு நியூ கலிடோனியா மற்றும் வானுயாடு உள்ளிட்ட தீவு பகுதிகளில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.
இதனால் ஆஸ்திரேலியாவில் கடற்கரை மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதேபோல் நேற்று கன்னியாகுமரியில் சுனாமி வரப்போவதாக வதந்திகள் பரவி வந்தன. இதனால் இரவு முழுவதும் கவலையாய் தூங்காமல் விழித்திருந்த கடற்கரை மக்கள்.
மேலும் வதந்திகள் பரப்புவோருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Comments