தமிழகத்தில் மிக கனமழை பெய்யும்.! -சென்னை வானிலை ஆய்வு மையம்.!!
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை இலங்கை மற்றும் தமிழகத்திற்கு இடையே நீடிக்கிறது.
வடகிழக்கு பருவமழை இதுவரை 27 செ.மீ. பெய்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் மிக பலத்த மழையும் வட தமிழகத்தில் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு மீன்பிடிக்க செல்லுமாறு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Comments