பகல் கொள்ளையர்கள்-மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள அருளானந்தம் சாப்பாட்டு கடைக்கு எனது நண்பருடன் சென்றிருந்தேன்.இலையில் சாதம் போட்ட பின்பு மூனு வகை குழம்பு இருப்பதாக கூறியதால் மீன்குழம்பு கேட்டோம் அதை மூன்று சிறிய கிண்ணத்தில் வைத்து சென்றார்கள் .அதில் மீன் துண்டும் இல்லை,சாப்பாடு சாப்பிட்ட பிறகு எங்களுக்கு பில் தரப்பட்டது.அதனைப் பார்த்து நானும் எனது நண்பனும் திகைத்து நின்றோம். அதில் 1080ரூபாய் என்று இருந்தது.சாதம் மட்டும் 120ரூபாய், மீன் குழம்பு 120ரூபாய், நாம் சாப்பிடும்போது குழம்பு பற்றவில்லையெனில் மேலும் குழம்பு வாங்கிசாப்பிட்டோம் அதற்கும் 120ரூபாய் என்று கூறினார். தலா ஒரு நபர்க்கு ரூ 360 மொத்தம் ரூ 1080,இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை இதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவரிடம் கூறினேன். பின்னர் அவர்கள் அங்கு ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்த தகவல் பலகையில் உள்ள விலை பட்டியலை காண்பித்தனர்.நாங்கள் இந்த கடைக்கு புதியவர்,இதைப்பற்றி எங்களிடம் தெரிவித்து இருக்க வேண்டும். அல்லது விலைப்பட்டியல் தெரியும்படியாக வைத்து இருக்க வேண்டும் அல்லவா இதனை ஏன் தாங்கள் செய்யவில்லை என்றோம் ,மேலும் ஏழை எளிய மக்கள் வந்து சாப்பிடும்போது எப்படி இவ்வளவு தொகையை எப்படி கொடுக்க முடியும் என்று கேட்டபோது அவர் சொல்கிறார் ."பணம் இல்லையென்றால் அவர்கள் போட்டிருக்கும் நகைகளை கொடுத்துவிட்டு சென்று பின்னர் வந்து திருப்புவார்கள் என்று திமிராக பதில் சொன்னார். இதை பற்றி நான் அருகிலுள்ள காவல் நிலைத்தில் புகார் கூறினேன். அவர்கள் புகாரை ஏற்க மறுத்து விட்டனர்.இதனால் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களின் கோரிக்கையாகும்.
நன்றி:தமிழக மக்கள் இயக்கம்
நன்றி:தமிழக மக்கள் இயக்கம்

Comments