தென்கிழக்கு வங்க கடலில் இலங்கைக்கு அருகில் நிலை கொண்டுள்ள தாழ்வுநிலையால் தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று லட்சத்திவுகளை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் மற்றும் கேரளாவில் மழை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலுக்குள் சென்ற 50 படகுகள் திரும்பி வரவில்லை என்றும் அதில் 80 பேர் வீடு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் புதன் இரவு தொடஙகிய மழை இன்னும் விட்டபாடில்லை.
மழை ஒருபுறம் பெய்து கொண்டிருக்க நேற்று சூறைக்காற்று வேகத்தில் வீசியதில் அங்குள்ள மரம்,மின்கம்பம், தண்ணிர் தொட்டிகள் போன்றவற்றை சூறையாடி சென்றதில் பாதிபேர் சூறாவளியால் வீட்டை இழந்து தெருவில் வந்து நிற்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை, காவல்துறை அதிகாரிகள் ,பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.! மீண்டும் வருக.!

Comments