ட்ரூகாலர் உளவு பார்க்க வடிவமைக்கப்படவில்லை என தகவல் பாதுகாப்பு துறைக்கு பதிலடி கொடுத்துள்ளது ட்ரூகாலர். !!
இந்திய ராணவ விரர்கள பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் உள்ள சில வகை அப்ளிக்கேஷன்கள் உளவு பார்ப்பதாகவும், தகவல்களை திருடுவதாகவும் கூறி சில வகை அப்ளிக்கேஷன்களை ராணுவ வீரர்கள் பயன்படுத்த கூடாது என தகவல் பாதுகாப்பு துறை கூறி இருந்தது.
மேலும் சில நாடுகள் அப்ளிகேஷனை பயன்படுத்தி உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.அந்த தடை செய்யப்பட்ட அப்ளிகேஷனின் பட்டியலை இந்திய தகவல் பாதுகாப்பு தறை வெளியிட்டுள்ளது.அந்த பட்டியலில் அதில் வீ சாட், ட்ரூகாலர், வீபோ, யூசி ப்ரவுசர் மற்றும் யூசி நியூஸ் போன்ற அப்ளிகேஷன்களைக் குறிப்பிட்டிருந்தது.
இந்த பட்டியலில் ட்ரூகாலர் இடம்பெற்றதற்கு ட்ரூகாலர் நிறுவனம் மறுத்துள்ளது.மேலும் இது உளவு பார்க்கும் அப்ளிகேஷனை நாங்கள் உருவாக்கவில்லை.
ட்ரூகாலரில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் அனைத்து பயனர்களின் உத்தரவு பெற்ற பின்னரே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Comments