எமோஜி வார்த்தைகளை விட மக்களின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தக்கூடியது.
புதுடெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் குர்மீத் சிங் என்பவர் வாட்ஸ்அப்பில் உள்ள நடுவிரல் எமோஜியை 15 நாள்களுக்குள் நீக்கப்பட வேண்டும் இல்லையேல் வாட்ஸ்அப் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளார்.
இதற்காக சட்டரீதியாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
இந்தியாவை பொறுத்தவரை நடுவிரல் காண்பிக்கும் முறை என்பது அவமதிப்பு, ஆபாசம் மற்றும் மற்றவர்களை இழிவுபடுத்தும் செய்கை ஆகும்.
இந்த நடைமுறையானது இந்திய குற்றவியல் நடைமுறை பிரிவுகள் 354 மற்றும் 509 ஆபாசம் மற்றும் கீழ்தரமான சைகைகளை பயன்படுத்துவது குற்றமாகும்.
இன்னும் 15 நாட்களுக்குள் அந்த நடுவிரல் எமோஜியை நீக்க அந்த சட்ட ரீதியான அறவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி நீக்கப்படவில்லையென்றால் வாட்ஸ்அப் மீது வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments