காணாமல் போன இரண்டு எருமைகள் பேஸ்புக் மூலம் மீட்பு.!
கர்நாடக மாநிலத்தில் ஹெசகோட் தாலுகாவில் இஸ்துரு கிராமத்தில் 2 எருமைகள் காணாமல் போன நிலையில் அது மீண்டும் பேஸ்புக் என்ற சமுக வலைதளம் மூலம் எருமைக்கு சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் எப்பொழுதும் குழந்தைகள் மற்றும் சான்றிதழ்கள்தான் காணமால் போகும்.
ஆனால் இங்கு ஒருபடிக்கு மேலாக இரண்டு எருமைகள் காணாமல் போய் அது பேஸ்புக் மூலம் மீட்கப்பட்டுள்ளது.
இஸ்துரு கிராமத்தில் நாராயணசாமி என்றும் விவசாயி சொந்தமான 2 எருமைகள் மேய்ச்சலுக்கு சென்ற போது காணமல் போய்விட்டது.
அந்த இரண்டு எருமைகளையும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
அந்த இரண்டு எருமைகளும் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹோட்ரா கிராமத்துக்கு சென்று விட்டன.அந்த கிராமத்தில் மோகன் என்பவர் இரண்டு எருமைகளையும் பிடித்து தீனி போட்டு வளர்த்து வந்தார்.
மேலும் இரண்டு எருமைகளையும் புகைப்படம் எடுத்து அதை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.அந்த பதிவில் இரண்டு எருமைகள் வழி தவறி வந்துள்ளன. இந்த 2 எருமைகள் உரியவரிடம் கிடைக்கும் வரை ஷேர் செய்யவும் என அந்த பதிவில் கூறியிருந்தார்.
இந்த பதிவானது பகிரப்பட்டு
இந்த பதிவை எருமைக்கு சொந்தக்காரரான நாராயணசாமியின் நண்பர் பேஸ்புக்கில் தற்செயலாக பார்த்துள்ளார்.
உடனே மோகனிடம் பேசி இந்த இரண்டு எருமைகளும் எனது நண்பருடையது எனக் கூறியுள்ளார்.
பிறகு நாராயணசாமியும அவரது நண்பரும் சேர்ந்து கோட்ரஹல்லி கிராமத்திற்கு சென்று அங்கிருந்து எருமைகளையும் மோகனிடம் இருந்து பெற்றுக்கொண்டனர்.பிறகு நாராயணசாமி மோகனிடம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.
பேஸ்புக் முலம் இரண்டு எருமைகள் கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை.

Comments