இமாச்சலபிரதேசம்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ ஒருவர் பெண் போலீஸ் ஒருவரை கன்னத்தில் அறைந்தார்.
பதிலுக்கு அந்த பெண் போலீசும் எம்எல்ஏவை திருப்பி கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததது.
இதனால் எம்எல்ஏ அனைவரிடம் தோல்விக்கான காரணம் குறித்து ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஆகவே அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க அலுவலகம் முன்பு போலிசார் குவிக்கப்பட்டனர்.
அப்போது அங்கு தாமதமாக வந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆஷா கூட்டத்தில் நுழைய முயன்றார்.
தீடீரென பெண் போலீஸ் ஒருவரும் எம்எல்ஏ ஆஷாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் பெண் போலீஸை எம்எல்ஏ ஆஷா கன்னத்தில் அடித்து விட்டார்.
அதே போல் போலிஸும் கொஞ்சம் கூட டைமிங் மிஸ் பண்ணாமல் பலார் என்று விட்டார்.
இதையடுத்து இருவரையும் தனித்தனியே அழைத்துச் சென்றுசமாதானப்படுத்தப்பட்டனர்.
அதன்பின்பு எம்எல்ஏ ஆஷா அந்த போலீஸிடம் மன்னிப்பு கேட்டார்.பிறகு பெண் போலீஸும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இந்த வீடியோ தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து குறித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.
Comments