கன்னியாகுமரி அருகில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக மாறியது.
இநனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒகி புயலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்ட நிலையில், ஒகி புயல் திருவனந்தபுரத்தை நோக்கி நகர்ந்து சென்றது.
இதன் காரணமாக கேரளாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற சுமார் 150 மீனவா்கள் தற்போது வரை கரை திரும்பவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் அருகேயுள்ள தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கன மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் கடலில் இறந்த மீனவர் சபினன் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுடன் நிர்மலா சீதாராமன் சந்திந்து ஆறுதல் கூறி வருகிறார்.
Comments