குமரி அருகே நிலைகொணடுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஓகி புயல் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை வெளுத்து வாங்கி இன்னும் அந்த பாதிப்பிலிருந்து மீண்டபாடில்லை.
ஆனால் இப்பொழுது மீண்டும் ஒரு புயல் கிளம்பியுள்ளதால் பீதியில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மக்கள் உள்ளனர்.
குமரியிலிருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 8 மணிநேரத்தில் புயல் சின்னமாக உருவாக வாய்ப்பு இருப்பதாலு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதே போல் குமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதலே லேசாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இதே போலே தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர்,சென்னை ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
காற்றழுத்த இந்த நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதால் இருப்பதால் தென் தமிழக மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Comments