Skip to main content

Posts

Showing posts from June, 2017

அடுத்த ஃஷிப்ட்டுக்கு ஆள் வந்தாச்சு! !! புதிய இணையதள வைரஸ்: 'பொருளாதார அழிவை ஏற்படுத்துவதே நோக்கமானதாக உள்ளது!!

உலகெங்கும் பொருளாதாரப் பேரழிவை ஏற்படுத்துவதே புதிய 'பெட்யா' இணைய வைரஸைப் பரப்பியவர்களின் நோக்கம் என்று ஐரோப்பிய யூனியனின் இணைய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். கணினிகளின் செயல்பாட்டை முடக்கும் புதிய வகை ரான்சம்வேர் இணைய வைரஸ் உலகின் பல பாகங்களில் கடந்த சில நாட்களாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  ஊடுருவல் மூலம் முடக்கிய கணினியை மீண்டும் செயல்பட வைக்க பிணைத் தொகை கேட்பது என்பது வெறும் கண்துடைப்பு. பாதிக்கப்பட்ட கணினியை மீண்டும் செயல்படச் செய்ய பிணைத் தொகை கோரும் நோக்கத்துடன் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்படவில்லை என்று கருத இடமிருக்கிறது. அதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்துவதுதான் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்களின் குறிக்கோள். கணினிகளையும் முக்கிய அமைப்புகளின் மின்னணு சேமிப்பகங்களையும் ஊடுருவித் தாக்குவதன் மூலம், அதிகபட்ச பாதிப்பையும் பொருளாதார அழிவையும் ஏற்படுத்துவதே உண்மையான நோக்கம் என்பது தற்போது தெரிய வந்துள்ளது என்றார் அவர். அமெரிக்காவில் அமைந்துள்ள சர்வதேச சரக்குப் போக்குவரத்துக் கப்பல் நிறுவனம் மேர்ஸ்க், மருந்து நிறுவனம் மெர்க், பிர...

காஷ்மீரில் இணைய 4G மற்றும் 3G சேவைகள் ரத்து

ஸ்ரீநகர்: நாட்டிற்கு எதிரான கருத்துக்கள் மற்றும் வதந்திகள் பரப்பப்படுவதாக கூறி காஷ்மீர் முழுவதும் இணையதள வேகத்தை குறைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல நகரங்களில் நாட்டிற்கு எதிரான பல கருத்துக்கள் இணையதளம் வழியாக பரப்பப்படுகிறது. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து வதந்திகளும் பரப்பப்படுகிறது. இதனால், அங்கு எப்போதும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.அதன்படி, காஷ்மீர் முழுவதும் இணையதள வேகம் வினாடிக்கு 128 கிலோ பைட்ஸ் என்ற வேகத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், 4G மற்றும் 3G சேவைகள் 2G -ஆக குறைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

பிக்பாஸ் ஃஅப்டேட்!!!!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் ஒளிப்பரப்பட்டது.. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கென்று அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட வீட்டில் பதினைத்து பிரபலங்களும் தங்களது வாழ்கையை துவங்கினார்கள். இரவு 12 மணியளவில் பிரபலங்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது. முதல் நாள் இருந்து அந்த வீட்டில் உள்ள் பிரபலங்கள் தான் உணவை சமைத்துக்கொள்ள வேண்டும். 1.30 மணியளவில் பிரபலங்கள் தங்குவதற்கு தேவையான பொருட்கள் ஒரு சூட்கேஸ்லில் வழங்கப்பட்டது பின்னர் அனைவரும் தூங்கச் சென்றனர். ஓவியாவுக்கு புதிய இடம் என்பதால் துக்கமின்மையால் தவித்தார். பின்னர் அனைவரும் காலையில் எழுந்திருத்தனர். வீட்டை நிர்வகிப்பது என்பது உரையாடினார்கள். மேலும் தங்களுக்குள் சிலர் உரையாடிக்கொண்டர். பின்னர் பிக்பாஸின் உத்தரவு படி வீட்டை நிர்வகிப்பதற்கான தலைவரை தேர்தெடுக்கும் பணி நடைப்பெற்றது. 15 உறுப்பினர்களும் தங்களுக்கு ஓருவரை தலைவராக தேர்தெடுக்க வேண்டும் . இந்த போட்டியில் காயத்திரி ரகுராம் , கணேஷ் வெங்கட்ராம் , சினேகன் ஆகியோர் பரித்துரைக்கப்பட்டனர்.கடைசியாக சினேகன் அந்த இல்லத்தின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்...

வேலையில்லா பட்டதாரி! VIP 2 TRAILER!!

#Bigboss!!கமலுடன் இணையும் 14 நட்சத்திரங்கள்.; லட்சுமிராய் மட்டும் மறுப்பு

விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒன்றை கமல் தொகுத்து வழங்கவுள்ளார் என்பதை பார்த்தோம். இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்புக்கு தயாராகிவிட்டது. நாளை ஜீன் 25 இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகும். இதில்கலந்துக் கொள்ளும் 14 பிரபலங்கள், 100 நாட்கள் வெளியுலகத்தை பார்க்காமல் ஒரே வீட்டிற்குள் அனைத்து வசதிகளுடன் இருக்கலாம். ஆனால் டிவி, செல்போன், நியூஸ் பேப்பர், ரேடியா உள்ளிட்ட எந்தவிதமான வெளியுலக தொடர்பும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பது தான் இந்த விதி. நிறைய கேமராக்கள் இவர்களை கவனித்துக் கொண்டே இருக்கும். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்துக் கொள்ள போகிறார்கள் என்ற பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. அவர்கள்… அமலாபால்: திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகை. சடகோபன் ரமேஷ்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி: கோலிவுட்டின் கவர்ச்சி நடிகை ராதாரவி: பழம்பெரும் வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் சஞ்சனா ஷெட்டி: ‘ரேணிகுண்டா’ நாயகியான இவர் ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார் அமித் ராகவ்: தொலைக்காட்...

நம்ப முடியாத தள்ளுபடி விலையில் ஐபோன் 6!

பிளிப்கார்ட் இணைய வர்த்தக நிறுவனம் தந்தையர் தினத்தை முன்னிட்டு ஐபோன் 6 மொபைலை ரூ.14 ஆயிரம் தள்ளுபடி விலையில் விற்பதாக அறிவித்துள்ளது. பிளிப்கார்ட் நிறுவனம் தந்தையர் தினத்தை கொண்டாடும் வகையில் வாடிக்கையாளர்களைக் கவர பல கவர்ச்சிகரமான சலுகைகளை அளிக்கிறது. அந்த வகையில் ஐபோன் வாங்க வேண்டும் என்ற ஆசையுள்ளவர்களுக்கு வலை வீசும் விதமாக ஐபோன் 6 மொபைலை சலுகை விலையில் அளிக்கிறது. ரூ.36,990 மதிப்புள்ள ஐபோன் 6 மொபைலை 40 சதவீதம் தள்ளுபடி விலையில் அளிக்கிறது. அதாவது, ரூ.14,000 விலை குறைவாக ரூ.21,999க்கு கிடைக்கிறது. எக்ஸ்சேன்ஜ் ஆஃபர் மூலம் வாங்கினால் மேலும் ரூ.15,000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது

சாம்சங் நிறுவனத்தின் #GalaxyTabS3 இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனம், அதன் புதிய கேலக்ஸி எஸ்3 டேப்லட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. எல்டிஈ தொழில்நுட்ப வசதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கேலக்ஸி எஸ்3 டேப்லட் விலை ரூ.47,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருப்பு, சில்வர் ஆகிய வண்ணங்களில் இந்த டேப்லட் கிடைக்கும் என்று, சாம்சங் கூறியுள்ளது. இந்த டேப்லட் வாங்க விரும்புவோர் மேலுறை ரூ.2,999 விலைக்கும், கீபோர்டு கவர் ரூ.8,499 விலைக்கும் வாங்க வேண்டும் என, சாம்சங் தெரிவித்துள்ளது. அறிமுக காலச் சலுகையாக, சாம்சங் டேப்லட் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ரிலையன்ஸ் ஜியோ உடன் இணைந்து, 28 ஜிபி + 28 ஜிபி என டபுள் டேட்டா சலுகை ரூ.309 விலையில் வழங்கப்படுவதாக, சாம்சங் குறிப்பிட்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் #GalaxyTabS3 இந்தியாவில் அறிமுகம்

சாம்சங் நிறுவனம், அதன் புதிய கேலக்ஸி எஸ்3 டேப்லட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. எல்டிஈ தொழில்நுட்ப வசதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த கேலக்ஸி எஸ்3 டேப்லட் விலை ரூ.47,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கருப்பு, சில்வர் ஆகிய வண்ணங்களில் இந்த டேப்லட் கிடைக்கும் என்று, சாம்சங் கூறியுள்ளது. இந்த டேப்லட் வாங்க விரும்புவோர் மேலுறை ரூ.2,999 விலைக்கும், கீபோர்டு கவர் ரூ.8,499 விலைக்கும் வாங்க வேண்டும் என, சாம்சங் தெரிவித்துள்ளது. அறிமுக காலச் சலுகையாக, சாம்சங் டேப்லட் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ரிலையன்ஸ் ஜியோ உடன் இணைந்து, 28 ஜிபி + 28 ஜிபி என டபுள் டேட்டா சலுகை ரூ.309 விலையில் வழங்கப்படுவதாக, சாம்சங் குறிப்பிட்டுள்ளது.

மேப்புக்கு ஆப்பு வைக்கும் சர்வே ஆஃப் இந்தியா!

கூகுள் மேப் போதிய நம்பகத்தன்மை உடையதல்ல என்பதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என்று சர்வே ஆஃப் இந்தியா அமைப்பின் சர்வேயர் ஜெனரல் ஸ்வரன சுப்பாராவ் எச்சரித்துள்ளார். SHARE மத்திய அரசின் சர்வே ஆஃப் இந்தியா அமைப்பின் 250வது ஆண்டு விழா டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இந்திய சர்வேயர் ஜெனரல் ஸ்வரன சுப்பாராவ் கூகுள் மேப் நம்பகத்தன்மை உடையது அல்ல என்று எச்சரித்தார். “கூகுள் மேப் மூலம் ரெஸ்டாரெண்ட் மற்றும் பார்க்கிங் பகுதிகளை வேண்டுமானால் எளிதாக கண்டுபிடிக்கலாம். ஆனால், மற்ற இடங்கள் கூகுள் மேப்பில் துல்லியமாகக் காட்டப்படுவதில்லை. கூகுள் மேப் இந்திய அரசின் அங்கீகாரம் பெற்றதும் இல்லை. எனவே, கூகுள் மேப்பை சார்ந்திருப்பதைத் தவிரக்க வேண்டும். அதனை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது.” என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கடந்த 2010ஆம் ஆண்டு கூகுள் மேப்பில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தாக காட்டப்படுவது சர்ச்சையைக் கிளப்பியது. 2016ஆம் ஆண்டில் இந்திய வரைபடத்தை தவறாக காட்சிப்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டனையும் அபராதமும...

விரைவில் பேஸ்புக்கில் உணவு ஆர்டர் செய்யலாம்!

பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய வசதியின் படி வாடிக்கையாளர்கள் இனி உணவு வகைகளை முன்பதிவு செய்யலாம். முதல் கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வசதியின் படி, பேஸ்புக் செயலியில் கொடுக்கப்பட்டுள்ள ஹைாம்பர்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். பின் உணவகங்களில் இருந்து உணவு வகைகளை டெலிவரி.காம் அல்லது ஸ்லைஸ் தளம் மூலம் ஆர்டர் செய்யலாம். உலகில் வேகமாக வளர்ந்து வரும் பேஸ்புக், இந்த ஆண்டின் இறுதிக்குள் 200 கோடி வாடிக்கையாளர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரம்ஜான் ஒரு சிறப்பு பார்வை!!!

சமூக வலைதளங்கள் பயன்படுத்தும் இலங்கையர்களின் கவனத்திற்கு!

சமூக வலைதளங்கள் ஊடாக தனியாக அல்லது குழுக்களாக மத மற்றும் இன ரீதியான வெறுப்புணர்வு பிரசாரங்களை முன்னெடுக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுக்கவுள்ளது. சமூக வலைதளங்களில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் கண்காணிக்க உள்ளனர். பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினருடன் இணைந்து நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத் விஜேசேகர கூறியதாக ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் வெளியிடப்படும் பதிவுகள், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மற்றும் இணைய குற்றங்கள் தொடர்பான பிரிவினர் தீவிவரமாக கண்காணித்து வருவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மதங்கள் மற்றும் இனங்களுக்கு இடையே ஏற்படும் முறுகல் நிலையைத் தணிக்கும் ஒரு நடவடிக்கையாகவே, அரசாங்கம் இதை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மேப்ஸ் நம்பத்தகுந்தவை அல்லை : சர்வேயில் தகவல்

கூகுள் மேப்ஸ் துல்லியமானதாக இல்லாததால் நம்பத் தகுந்தவை அல்ல என சர்வேயர் ஜெனரல் சுவர்ண சுப்பாராவ் ஒரு நிகழ்வில் கூறியுள்ளார். சர்வே ஆஃப் இந்தியா நடத்திய ஒரு நிகழ்வில் சர்வேயர் ஜெனரல் சுவர்ண சுப்பாராவ் கலந்துக் கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது : "கூகுள் மேப்புகள் அரசால் உருவாக்கப்பட்டவை அல்ல. அதனால் அவை அரசால் அங்கீகரிக்கபடவில்லை. மேலும் அவை துல்லியமானவையும் இல்லாததல் அதன் நம்பகத்தன்மையும் சந்தேகத்துக்குரியது. கூகுள் மேப் அரசால் தடை செய்யப்படவில்லை. அதனை ஓட்டுனர்கள் பயன்படுத்துவதால் தவறில்லை. ஆனால் இருப்புப்பாதை அமைப்பு, சாலை அமைப்பு போன்றவைகளுக்கு பயன்படுத்தும் வகையில் அவைகள் இல்லை." இவ்வாறு ராவ் கூறினார். ஆனால் அமெரிக்காவில் கூகுள் மேப் துல்லியமாக அனைத்து விவரங்களையும் தருவதால் அதை பயங்கரவாதிகள் உபயோகிக்கும் வாய்ப்பு உள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளது. இந்திய சர்வே நிறுவனம் தனது மேப்புகளை அனைவரும் இலவசமாக பயன்படுத்த செய்யப் போகிறது என்றும் அதனால் துல்லியமான மேப்புகளை இணையத்தில் ஏற்றும் முயற்சி நடக்கிறது என்றும் மற்றொரு அதிகாரி கூறியுள்ளார்

.ஏர்டெல்! மாதம் 10 ஜிபி இலவசம்!

வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க ஏர்டெல் தனது 30 ஜிபி இலவச டேட்டாவை மேலும் மூன்று மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்துள்ளது. மொபைல் போன் நம் வாழ்க்கையில் ஏற்படுத்திய மாற்றத்தை விட ஜியோ, மொபைல் போன் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம் மிகப்பெரியது. இதற்கு போட்டியாக ஏர்டெல், ஃபோடபோன் போன்ற முன்னனி நிறுவனங்கள் அடுத்தடுத்து அதிரடி ஆஃபர்களை அள்ளித் தந்தன. அந்த வகையில் ஏர்டெல் முன்னர் அறிவித்த தன்னுடைய ஆஃபர் திட்டத்தை மேலும் மூன்று மாத காலம் நீட்டிப்பு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தப் புதிய அறிவிப்பின் அடிப்படையில், ஏர்டெல் ஏப்ரல் மாதத்திலிருந்து தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக மூன்று மாதங்களுக்கு 30 ஜிபி இலவசம் என்ற சேவையை வழங்கி வந்தது. தற்போது இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதை அடுத்து மேலும் அடுத்த மூன்று மாதங்களுக்கு 30 ஜிபி இலவசமாகவே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை ஜூலை 1-ம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சலுகையை ‘மை ஏர்டெல்’ செயலி மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Mersal firstlook

Movie Name:MERSAL(மெர்சல்) Actors:vijay & kajal agarwal Music:A.R Rahman

ஒரு நாளில் இத்தனை ட்வீட்டா? மெர்சல் பற்றி ட்விட்டர் நிறுவனம் அதிரடி தகவல்

நடிகர் விஜய்யின் 61வது படத்திற்கு மெர்சல் என பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. மாலை ஆறு மணி முதல் சமூக வலைத்தளங்களில் எங்கு பார்த்தாலும் 'மெர்சல்' என்ற வார்த்தை தான் தென்பட்டது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனம் மெர்சல் பற்றி புதிய தகவலை வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ட்வீட் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இரவு 12.29 மணிக்கு, ஒரு நிமிடத்திற்கு 2100 பேர் மெர்சல் பற்றி ட்விட்டியுள்ளனர்.