Skip to main content

Posts

Showing posts from December, 2017

பத்மாவதி படத்தின் பெயர் மாற்றம்.!!

தீபிகா படுகோனே நடிப்பு,சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. இப்படமானது டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவிருத்திருந்தது. அனால் இப்படத்தில் ராஜபுத்திர்கள் மற்றும் பத்மாவதி பற்றி தவறான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக ராஜஸ்தான்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பல இடங்களில் போரட்டங்கள் வெடித்தது. இப்பிரச்சினையால் படத்தை வெளியிட முடியாமல் போனது.மேலும் இப்படத்திற்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்கள் வெளிப்படையாக தங்களது எதிர்ப்பு கருத்துக்களை தெரிவித்தனர். பத்மாவதி படமானது டிசம்பர் 28ஆம் தேதி திரைப்பட தணிக்கை குழுவுக்கு சென்றது.படத்தை பார்வையிட்ட தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்துள்ளது. மேலும் முக்கியமாக பத்மாவதி என்ற படத்தின் தலைப்பை மாற்ற பரிந்துரை செய்துள்ளது. அதாவது பத்மாவதி என்ற தலைப்பை பத்மாவத் என மாற்றுமாறு கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளது. படத்தில் சில மாற்றங்களை செய்யவும்,படத்தில் 26 கட் செய்யவும் சென்சார் போர்டு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே நடித்த படங்களில் அதிக எதிர்ப்பு கிளம்பியது பத்மாவதி படம்தான்...

குமரி வாசிகளே உஷார்.புதுசா புயல் ஒன்னு கிளம்புது!!

குமரி அருகே நிலைகொணடுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே  ஓகி புயல் நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை வெளுத்து வாங்கி  இன்னும் அந்த பாதிப்பிலிருந்து மீண்டபாடில்லை. ஆனால் இப்பொழுது மீண்டும்  ஒரு புயல் கிளம்பியுள்ளதால் பீதியில் நெல்லை, தூத்துக்குடி,  கன்னியாகுமரி மக்கள் உள்ளனர். குமரியிலிருந்து 210 கிலோமீட்டர் தொலைவில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 8 மணிநேரத்தில் புயல் சின்னமாக உருவாக வாய்ப்பு இருப்பதாலு தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே போல் குமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதலே லேசாக ஆங்காங்கே மழை பெய்து  வருகிறது.  இதே போலே தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர்,சென்னை  ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது.  காற்றழுத்த இந்த நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதால் இருப்பதால் தென் தமிழக ...

பெண் போலீஸை அடித்த எம்எல்ஏ அதே வேகத்தில் டைமிங் மிஸ் பண்ணாமல் திருப்பி கொடுத்த பெண் போலீஸ். !

இமாச்சலபிரதேசம்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ ஒருவர் பெண் போலீஸ் ஒருவரை கன்னத்தில் அறைந்தார்.  பதிலுக்கு அந்த பெண் போலீசும் எம்எல்ஏவை திருப்பி கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில்  ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததது.  இதனால் எம்எல்ஏ அனைவரிடம் தோல்விக்கான காரணம் குறித்து ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டார். ஆகவே  அங்கு அசம்பாவிதங்கள் ஏதும்  நடைபெறாமல் இருக்க அலுவலகம் முன்பு போலிசார் குவிக்கப்பட்டனர்.  அப்போது அங்கு தாமதமாக வந்த காங்கிரஸ்  எம்எல்ஏ  ஆஷா கூட்டத்தில் நுழைய முயன்றார். தீடீரென பெண் போலீஸ்  ஒருவரும் எம்எல்ஏ  ஆஷாவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பெண் போலீஸை எம்எல்ஏ ஆஷா கன்னத்தில்  அடித்து விட்டார். அதே போல் போலிஸும் கொஞ்சம் கூட டைமிங் மிஸ் பண்ணாமல் பலார் என்று விட்டார். இதையடுத்து இருவரையும் தனித்தனியே அழைத்துச் சென்றுசமாதானப்படுத்தப்பட்டனர். அதன்பின்பு எம்எல்ஏ  ஆஷா அந்த போலீஸிடம் மன்னிப்பு கேட்டார்.பிறகு பெண் போலீஸு...

அண்ணா பல்கலைகழகம் முதல் முறையாக எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை அனுப்புகிறது

சென்னை : அண்ணா பல்கலைகழகம் முதல் முறையாக எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை  அனுப்புகிறது.  5 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் முடிவுகள் அனுப்பப்படுகிறது என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகி தெரிவித்துள்ளளார் .                          click here

வாட்ஸ்அப் மீது வழக்கு.நடுவிரல் எமோஜியை நீக்க வேண்டி சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

எமோஜி வார்த்தைகளை விட மக்களின் உணர்வுகளை  அழகாக வெளிப்படுத்தக்கூடியது. புதுடெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் குர்மீத் சிங் என்பவர் வாட்ஸ்அப்பில் உள்ள நடுவிரல் எமோஜியை 15 நாள்களுக்குள் நீக்கப்பட வேண்டும் இல்லையேல் வாட்ஸ்அப் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என எச்சரித்துள்ளார். இதற்காக சட்டரீதியாக வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.   இந்தியாவை பொறுத்தவரை  நடுவிரல் காண்பிக்கும் முறை என்பது அவமதிப்பு, ஆபாசம் மற்றும் மற்றவர்களை இழிவுபடுத்தும் செய்கை ஆகும். இந்த நடைமுறையானது இந்திய குற்றவியல் நடைமுறை பிரிவுகள் 354 மற்றும் 509 ஆபாசம் மற்றும் கீழ்தரமான சைகைகளை பயன்படுத்துவது குற்றமாகும். இன்னும் 15 நாட்களுக்குள் அந்த நடுவிரல் எமோஜியை நீக்க அந்த சட்ட ரீதியான அறவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி நீக்கப்படவில்லையென்றால் வாட்ஸ்அப் மீது வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 30-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் 6மாநிலங்களில் தான் அளித்து வரும் டெலிகாம் சேவையினை நிறுத்துகிறது.!!

ஏர்செல் நிறுவனத்தின் கடன் சுமை  காரணமாக ஜனவரி 30-ம் தேதியுடன்  6மாநிலங்களில் சேவை நிறுத்தம் தொலைத்தொடர்பு துறை ஒழுங்கு முறை ஆணையமான டிராய் ஜனவரி 30-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனம் 6மாநிலங்களில் தான் அளித்து வரும் டெலிகாம் சேவையினை நிறுத்தி விடும் என்று கூறியுள்ளது  ஏற்கனவே ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் இணையும் திட்டம் தோல்வியடைந்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 8 கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்செல் நிறுவனம் .  இந்திய சந்தையில் 4ஜி சேவையைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், சந்தைக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஏர்செல் நிறுவனத்திடம் 4ஜி அலைக்கற்றைகள் இல்லை. புதிதாக 4ஜி அலைக்கற்றைகளை வாங்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.  ஏர்செல் நிறுவனத்தின் கடன் சுமை 20 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ள நிலையில் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  40 ஆயிரம் டவர்களை வேறு நிறுவனத்துக்கும் விற்க ஏர்செல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய்க்கு ஜோடியாகிறார் நயன்தாரா

நடிகர் விஜய் நடிக்கும் 62 வது படத்தை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இதன் ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், நடிகர்கள் தேர்வு தற்போது நடந்துவருகிறது. இதில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் விரைவில் ஸ்கிரீன்டெஸ்ட் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை நயன்தாராவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான அறம் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

பலூன் படத்தின் டிரைலர் இதோ உங்களுக்காக.!

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் பட்டைய கிளப்பும் டிரைலர்

மதுரை அருகே பேருந்தை வழிமறித்து இளைஞர் வெட்டிக் கொலை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தனிச்சியம் கிராமத்தில் பேருந்தை வழிமறித்து இளைஞரை வெட்டிக் கொன்றுள்ளனர்.  மதுரை கரிமேட்டைச் சேர்ந்த அமர் என்ற இளைஞரை 7 பேர் கொண்ட குழு வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதனால் தனிச்சியம் பகுதியில் போலிஸ் குவிக்கப்பட்டளது.இதனால்  சிறிதுநேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநர் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா,கூரையை பிச்சிக்கிட்டு ஆய்வு செய்த ஆளுநரால் வந்த வினை.!!

ஆளுநர் இன்று கடலூரில் வண்டிப்பாளையம்,அம்பேத்கர் நகர் முதலான பகுதிகளில் ஆய்வு செய்தார்.  அம்பேத்கர் நகர் தெருக்களில் ஆளுநர் செல்லும்போது வீட்டின் ஓரமாக உள்ள கீற்று மறைப்புக்குள் இருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு தூய்மை பணிகளை மேற்கொண்டார். ஆனால் கீற்று மறைப்புகள் ஏழைகளது குளியலறை என தெரியாததால் அங்கு நுழைந்த ஆளுநரை பார்த்து அங்கு குளித்துக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் பதறியடித்து ஒளிந்து கொண்டார்.  இதனையடுத்து ஆளுநரும் அதிகாரிகளும் அங்கிருந்து வேகவேகமாக நகர்ந்தனர். ஆனால் பெண்கள் சத்தம் போட பொதுமக்கள் ஆளுநரை சூழ்ந்து கொண்டணர் பிறகு அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பினர்.இதனால் அம்பேத்கர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

விராத் கோஹ்லி - நடிகை அனுஷ்கா சர்மா ஹனிமூன் புகைப்படம் வெளியாகியுள்ளது

கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி - நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் டிசம்பர் 11 ம் தேதி இத்தாலியில் நடந்தது.  இவர்களின் திருமண வரவேற்பு டில்லியில் டிசம்பர் 21 ம் தேதியும்,மும்பையில் டிசம்பர் 26 ம் தேதியும் நடக்க உள்ளது.  தற்போது பனிப்பிரதேசம் ஒன்றிற்கு ஹனிமூன் சென்றுள்ள இந்த ஜோடி, அங்கு தாங்கள் எடுத்துக் கொண்ட செல்பி போட்டோவை இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். 

பார்ட்டி படத்தின் டீசர் வெளியானது. !!

Party Official Teaser | Venkat Prabhu | Jai | Shiva | Sathyaraj | Regina | Premgi Amaren Venkat Prabhu's Party Official Teaser. Party Tamil movie 2017 ft. Jai, Shiva, Sathyaraj and Jayaram. Directed by Venkat Prabhu, music by Premgi Amaren and produced by T Siva under Amma Creations. Party, A Venkat Prabhu Hangover, also stars Shaam, Ramya Krishnan, Regina Cassandra, Sanchita Shetty, Nivetha Pethuraj, Nasser and Chandran among others. 

சக்க போடு போடு ராஜா -official tamil trailer2

jurassic world :fallen kingdom official trailer HD

உலகின் பரிணாம வளர்ச்சி மற்றும் மாற்றங்களை இந்த புகைப்படங்கள் காட்டுகிறது.

குறும்படம்:"எனக்கன பிறந்தவனே" இந்த மாரி புருசன் அமைகிறதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்.....சொல்ல வார்த்தைகள் இல்லை. !!

வீடியோ:மேடையில் விழுந்து வாரிய நடிகை தமன்னா.!

வீடியோ:மேடையில் விழுந்து வாரிய நடிகை தமன்னா.! தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் நடிகை தமன்னா. இவர் அண்மையில் நிகழ்ச்சியில் ஒன்றில்  கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரது உடை அனைவரையும் கவரும் வகையில் இருந்தது. ஆனால் அவருடைய காலணிகள் சரியாக இல்லாததால் அவர் மேடையில் பல முறை வழுக்கி விழுந்தார். இதனை கண்ட ரசிகர்கள் கத்தி கூச்சலிட்டு உள்ளனர். இதனால் தமன்னா அங்கிருந்து உடனடியாக வெளியேறியுள்ளார்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ, அந்த வீடியோ

ஸ்மார்ட்போனில் பயனாளர்களின் தகவல்கள் திருடும் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்கள்.!!

ஸ்மார்ட்போனில் பயனாளர்களின் தகவல்கள் திருடுகறது எனக் கூறி இந்திய பாதுகாப்பு துறையால் வெளியிடப்பட்டுள்ள அந்த அப்ளிகேஷன்கள. சில நாடுகள் அப்ளிகேஷனை பயன்படுத்தி தகவல்களை திருடுவதாகவும் மற்றும் உளவு பார்ப்பதாக இந்திய பாதுகாப்பு துறை குற்றம் சாட்டியுள்ளது.அந்த தடை செய்யப்பட்ட அப்ளிகேஷனின் பட்டியலை இந்திய தகவல் பாதுகாப்பு தறை வெளியிட்டுள்ளது.அந்த பட்டியல் இடம்பெற்ற அப்ளிகேஷன்கள் இதோ 1. Weibo 2. WeChat 3. SHAREit 4. Truecaller 5. UC News 6. UC Browser 7. BeautyPlus 8. NewsDog 9. VivaVideo- QU Video Inc 10. Parallel Space 11. APUS Browser 12. Perfect Corp 13. Virus Cleaner (Hi Security Lab) 14. CM Browser 15. Mi Community 16. DU recorder 17. Vault-Hide 18. YouCam Makeup 19. Mi Store 20. CacheClear DU apps studio 21. DU Battery Saver 22. DU Cleaner 23. DU Privacy 24. 360 Security 25. DU Browser 26. Clean Master – Cheetah Mobile 27. Baidu Translate 28. Baidu Map 29. Wonder Camera 30. ES File Explorer 31. Photo Wonder 32. QQ Inte...

இனி பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை சட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. !!

12 வயதிற்கும் குறைவான சிறுவர் சிறுமியர்களை பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை-மத்தியபிரதேச அரசு. மக்களின் கோரிக்கையை ஏற்று சிங் சௌஹான் தலைமையிலான மத்தியபிரதேச அரசு 12 வயதிற்குட்பட்ட  சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும்  குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற சட்டத்தை ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

வீடியோ:புயலின் கோர தாண்டவத்தால் மீனவர் உடல்கள் கடலில் மிதக்கும் பரிதாப காட்சி.!!

கன்னியாகுமரி அருகில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒகி புயலாக மாறியது.  இநனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஒகி புயலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்ட நிலையில், ஒகி புயல் திருவனந்தபுரத்தை நோக்கி நகர்ந்து சென்றது.  இதன் காரணமாக கேரளாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற சுமார் 150 மீனவா்கள் தற்போது வரை கரை திரும்பவில்லை.  கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமல்லாமல் அருகேயுள்ள தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கன மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் கடலில் இறந்த மீனவர் சபினன் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  நகை செருதூர் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட சபினன் உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதனர்.     ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுடன் நிர்மலா சீதாராமன் சந்திந்து ஆறுத...

ரஜினியின் 2.o ஏப்ரலில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!

ரஜினியின் 2.o ஏப்ரலில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’2.o’. இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை 450 கோடி ரூபாயில் லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படமானது ஜனவரி மாதம் ரீலிஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்நிலையில் மீண்டும் 2.o படத்தின் ரீலிஸ் தேதி மீண்டும் தள்ளிப்போனது. இதுகுறித்து லைக்கா புரொடக்சன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2.o படத்திற்கு  உலகத்தரமான கிராபிக்ஸ் வேலைகள் நடந்துவருகிறது.  மேலும்  அமெரிக்காவில் நடைபெறும் இந்த பணி முடிய அதிக நாட்கள் தேவைப்படுகிறது. அதனால் படத்தின் ரிலீஸ் தேதியை ஏப்ரலக்கு தள்ளி வைத்திருக்கிறோம். இன்னொரு முக்கியமான காரணம் 2.o படத்தின் வில்லன் நடிகர் அக்சயகுமார் நடித்த 'பத்மன்' திரைப்படம் ஜனவரி 25ல் வெளிடப்படவுள்ளது. இதை கணக்கில் கொண்டு ரஜினியின் '2.0' படத்தை ஏப்ரலில் வெளியிட படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. ரஜ...

வாட்ஸ் அப் நீயூ அப்டேட்:குழுவில் பிற குழு உறுப்பினர்கள் செய்தி பகிர்வதில் கட்டுப்பாடு

வாட்ஸ் அப் புது அப்டேட்: பிற குழு உறுப்பினர்கள் செய்தி பகிர்வதில் கட்டுப்பாடு  பேஸ்புக்கின் இணை நிறுவனமான வாட்ஸ்அப் ஒரு புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப்பில்  அறிமுகம் செய்துள்ளது. அந்த அப்டேட்டின் படி வாட்ஸ் அப் குரூப் அட்மின்கள் தங்கள் வாட்ஸ் அப் குழுவில், பிற வாட்ஸ் அப் உறுப்பினர்கள் புகைப்படங்கள், செய்திகள் பகிர்வதை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வாட்ஸ் அப் ஏற்படுத்தியிருக்கிறது.  புதிய அப்டேட்டின் (restricted group)மூலம் வாட்ஸ் அப் குழுவின் அட்மின்கள், தங்கள் குழுவில் யார் செய்தி பகிரவேண்டும், என்ன மாதிரியான செய்தி பகிர வேண்டும் என்பதை அட்மின் முடிவு செய்ய முடியும்.

காணாமல் போன இரண்டு எருமைகள் பேஸ்புக் மூலம் மீட்பு.!

காணாமல் போன இரண்டு எருமைகள் பேஸ்புக் மூலம் மீட்பு.! கர்நாடக மாநிலத்தில் ஹெசகோட் தாலுகாவில் இஸ்துரு கிராமத்தில் 2 எருமைகள் காணாமல் போன நிலையில் அது மீண்டும்  பேஸ்புக் என்ற சமுக வலைதளம் மூலம் எருமைக்கு சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் எப்பொழுதும் குழந்தைகள் மற்றும் சான்றிதழ்கள்தான் காணமால் போகும். ஆனால் இங்கு ஒருபடிக்கு மேலாக இரண்டு  எருமைகள் காணாமல் போய் அது பேஸ்புக் மூலம் மீட்கப்பட்டுள்ளது. இஸ்துரு கிராமத்தில் நாராயணசாமி  என்றும் விவசாயி சொந்தமான 2 எருமைகள் மேய்ச்சலுக்கு சென்ற போது காணமல் போய்விட்டது. அந்த இரண்டு  எருமைகளையும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அந்த இரண்டு  எருமைகளும் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹோட்ரா கிராமத்துக்கு சென்று விட்டன.அந்த கிராமத்தில் மோகன் என்பவர் இரண்டு எருமைகளையும் பிடித்து தீனி போட்டு வளர்த்து வந்தார். மேலும் இரண்டு எருமைகளையும் புகைப்படம் எடுத்து அதை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.அந்த பதிவில் இரண்டு எருமைகள் வழி தவறி வந்துள்ளன. இந்த 2 எருமைகள் உரியவரிடம் கிடைக்கும் வரை ஷேர் செய்யவும்  என அந்த...

ட்ரூகாலர் உளவு பார்க்க வடிவமைக்கப்படவில்லை என தகவல் பாதுகாப்பு துறைக்கு பதிலடி கொடுத்துள்ளது ட்ரூகாலர். !!

இந்திய ராணவ விரர்கள பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் உள்ள சில வகை அப்ளிக்கேஷன்கள் உளவு பார்ப்பதாகவும், தகவல்களை திருடுவதாகவும் கூறி சில வகை அப்ளிக்கேஷன்களை ராணுவ வீரர்கள் பயன்படுத்த கூடாது என தகவல் பாதுகாப்பு துறை கூறி இருந்தது. மேலும் சில நாடுகள் அப்ளிகேஷனை பயன்படுத்தி உளவு பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளது.அந்த தடை செய்யப்பட்ட அப்ளிகேஷனின் பட்டியலை இந்திய தகவல் பாதுகாப்பு தறை வெளியிட்டுள்ளது.அந்த பட்டியலில் அதில் வீ சாட், ட்ரூகாலர், வீபோ, யூசி ப்ரவுசர் மற்றும் யூசி நியூஸ் போன்ற அப்ளிகேஷன்களைக் குறிப்பிட்டிருந்தது. இந்த பட்டியலில் ட்ரூகாலர் இடம்பெற்றதற்கு ட்ரூகாலர் நிறுவனம் மறுத்துள்ளது.மேலும் இது உளவு பார்க்கும் அப்ளிகேஷனை நாங்கள் உருவாக்கவில்லை. ட்ரூகாலரில் வழங்கப்பட்டுள்ள வசதிகள் அனைத்து பயனர்களின் உத்தரவு பெற்ற பின்னரே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இனிமேல் சம்சாரத்த கூப்பிடனாலும் வாட்ஸ்அப் தான் மின்சாரத்த கூப்பிடனாலும் வாட்ஸ்அப் தான்.!!

மின்சாரம் தடை தொடர்பான புகார்களுக்கு வாட்ஸ்அப் எண்கள் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை  –  9445850829   காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் – 9444371912   ஈரோடு, சேலம் மற்றும் நாமக்கல்  –  9445851912 திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கரூர் – 9486111912   மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை  –  9443111912   விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் கடலூர் – 9445855768   கோயம்பத்தூர், திருப்பூர் மற்றும் நீலகிரி – 9442111912   நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் – 8903331912 வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி  –  6380281341 .. ஆகிய எண்களில் மின்சாரம் தொடர்பான தகவல்கள் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என மின்சார பகிர்மான கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

என்னது ஒரு மீன் சாப்பாடு 1080 ரூபாயா அதிர்ச்சியில் கஸ்டமர்.!!

பகல் கொள்ளையர்கள்-மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள அருளானந்தம் சாப்பாட்டு கடைக்கு எனது நண்பருடன் சென்றிருந்தேன்.இலையில் சாதம் போட்ட பின்பு மூனு வகை குழம்பு இருப்பதாக கூறியதால் மீன்குழம்பு கேட்டோம் அதை மூன்று சிறிய கிண்ணத்தில் வைத்து சென்றார்கள் .அதில் மீன் துண்டும் இல்லை,சாப்பாடு சாப்பிட்ட பிறகு எங்களுக்கு பில் தரப்பட்டது.அதனைப் பார்த்து நானும் எனது நண்பனும் திகைத்து நின்றோம். அதில் 1080ரூபாய் என்று இருந்தது.சாதம் மட்டும் 120ரூபாய், மீன் குழம்பு 120ரூபாய், நாம் சாப்பிடும்போது குழம்பு பற்றவில்லையெனில் மேலும் குழம்பு வாங்கிசாப்பிட்டோம் அதற்கும் 120ரூபாய் என்று கூறினார். தலா ஒரு நபர்க்கு ரூ 360 மொத்தம் ரூ 1080,இது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை இதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவரிடம் கூறினேன். பின்னர் அவர்கள் அங்கு ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்த தகவல் பலகையில் உள்ள விலை பட்டியலை காண்பித்தனர்.நாங்கள் இந்த கடைக்கு புதியவர்,இதைப்பற்றி எங்களிடம் தெரிவித்து இருக்க வேண்டும். அல்லது விலைப்பட்ட...

கன்னியாகுமரியில் கடலுக்குள் சென்ற 50 படகுகள் மாயம்.!!

தென்கிழக்கு வங்க கடலில்  இலங்கைக்கு அருகில் நிலை  கொண்டுள்ள தாழ்வுநிலையால் தமிழகத்தின் பல பகுதிகள்  மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்  காற்றழுத்த தாழ்வு நிலை இன்று  லட்சத்திவுகளை நோக்கி நகர்வதால் தமிழகத்தில் மற்றும் கேரளாவில் மழை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலுக்குள் சென்ற 50 படகுகள் திரும்பி வரவில்லை என்றும் அதில் 80 பேர் வீடு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் புதன்  இரவு தொடஙகிய மழை இன்னும் விட்டபாடில்லை. மழை ஒருபுறம் பெய்து கொண்டிருக்க  நேற்று சூறைக்காற்று வேகத்தில் வீசியதில் அங்குள்ள மரம்,மின்கம்பம், தண்ணிர் தொட்டிகள் போன்றவற்றை சூறையாடி சென்றதில் பாதிபேர் சூறாவளியால் வீட்டை இழந்து தெருவில் வந்து நிற்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை, காவல்துறை அதிகாரிகள் ,பேரிடர் மீட்பு குழுவினர்  ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.! மீண்டும் வருக.!